குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 19, 2013

சித்தர்களின் இரகசியப்பயிற்சி - சென்னை ஆத்ம ஞான யோக சபை

ஆர்வம் உள்ள நண்பர்கள் சென்னை ஆத்ம ஞான யோக சபையின் சித்தர்களின் இரகசிய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். விபரம் கீழ்வருமாறு; 


Sunday, September 15, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 32: நாமங்கள் 89 - 96

மூலகூடத்ரய-கலேபராயை (89)
மூல மந்திரத்தின் முக்கூடங்களின் பொருளே தனது காரணவடிவின் மூன்று கூறுகளாக உடையவள்.
த்ரய என்றால் மூன்று என்று பொருள். பஞ்சதசி மந்திரத்தின் மூன்று கூடங்களும் இங்கு குறிப்பிடப்படுகிறது. பஞ்சதசி மந்திரத்தின் வேர் காமகலா. ஆதலால் காமகலா என்பது தேவியின் ஸ்தூல உடலினையும் சூஷ்ம உடலினையும் குறிக்கும். மூன்று சூஷ்ம வடிவங்களில் முதலாவதான பஞ்சதசி வடிவம் 85 ஆவது நாமத்திலிருந்து 88 வது நாமம் வரை விளங்கப்படுத்தப்பட்டது. இரண்டாவது சூஷ்ம வடிவமான காமகலா இந்த நாமத்திலிருந்து விபரிக்கப்படுகிறது, சுருக்கமாக காமகலா என்பது ஹம்ஸத்தினதும் ஸோஹத்தினதும் இணைவினை கூறும் வடிவம். (ஹம்ஸ மந்திரம் பிரபஞ்சத்தினதும் தனி ஆன்மாவினதும் இணைவினை கூறும் மந்திரம்). காமகலாவின் வடிவம் மூக்கோணமும் அதன் நடுவில் மூன்று பிந்துகளுமாகும். இதுவே லலிதாம்பிகையின் உண்மையான ஸ்தூல வடிவமாகும், இதற்குரிய பீஜம் “ஈம்” ஆகும். இந்த பீஜம் மிக சக்தி வாய்ந்ததும் மாஹா சோடஷி மந்திரத்துடன் இணைத்து சரியாக ஜெபிக்கும் முறை தெரிந்தவருக்கு எல்லாவித செல்வங்களும் தடங்களின்றி தாரையாக கொட்டும். இது குருமுகமாய் மட்டுமே அறியவேண்டியது.

இந்த நாமத்துடம் தேவியின் சூஷ்ம வடிவமும், அதி சூஷ்ம வடிவத்தினதும் விவரணை முடிவுறுகிறது. இதன் பிறகு தேவியின் பராதிசூஷ்ம வடிவான குண்டலினியின் விபரணை தொடங்குகிறது.

குலாம்ருதைக-ரஸிகாயை (90)
குலாமிருதத்தை இரமிப்பவள்

இந்த நாமத்திலிருந்து 111 வரை பராதி சூஷ்ம வடிவான குண்டலினியின் விபரணம் கூறப்படுகிறது. சூஷ்ம வடிவம் பஞ்சதசி அல்லது சோடஷி, அதிசூஷ்ம வடிவம் காமகலா ஆகும். பராதிசூஷ்ம வடிவம் குண்டலினியாகும். இந்த இருபது நாமங்கள் தவிர்ந்து சக்கரங்கள் தொடர்பான விரிவான விபரணை 475 தொடக்கம் 534 வரை விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால இந்த நாமங்கள் யோகினி ந்யாசம் என்ற தலைப்பின் கீழ் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சக்கரங்களின் பௌதீக வர்ணணையினைப் பற்றியே குறிப்பிடுகிறது,

அவள் குலவின் சுவையில் விருப்புள்ளவள். குலம் என்றால் சஹஸ்ராரத்திலிருந்து ஒழுகும் அமிர்தம் என்று பொருள். குண்டலினியானது சஹஸ்ராரத்தினை அடைந்து சிவனுடன் இணையும் போது அமிர்த துளிகள் கொட்டும். இந்த அமிர்தம் தொண்டையினூடாக கீழே உடலிற்கு வழியும். இந்த நிலை அமிர்தவர்ஷிணி எனப்படும். தேவி குலாவினை இரசிப்பது அதன் சுவையால் மட்டுமல்ல, சிவனுடன் இணைந்த நிலையால் வருவாதால் என்பதாலும் ஆகும். இந்த குலா குண்டலினி சஹஸ்ராரத்தினை அடைந்து சிவத்துடன் இணைந்தால் மட்டுமே சொரியும். இந்த நிலையில் அவள் சிவனை விட்டு அகல்வதற்கு நினைப்பதேயில்லை, அதனாலேயே அவள் மஹா சுவாஸினி (நாமம் 970) எனப்படுகிறாள். இதன் அர்த்தம் பெண்களில் மிக உயர்ந்த பெண் என்பதாகும். குலா என்பது பூமி உள் இழுத்த நிலையினையும் குறிக்கும், இந்தப் பொருளில் நோக்கும் போது இது மூலாதாரத்தினை குறிக்கும். மூலாதார சக்கரம் பூமி தத்துவத்துடன் தொடர்புடையது. மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையிலான குண்டலினியின் பாதையும் குலா எனப்படும். ஸௌந்தர்ய லஹரி பத்தாவது பாடலில் “குலகுண்டே குஹாரிணி” எனப்படுகிறது, இது மூலாதாரத்தில் காணப்படும் துளை எனப் பொருள் படும். மூலாதாரம் என்பது ஆண்களில் ஆண்குறிக்கும் குதத்திற்கும் இடையில் காணப்படும் இடத்தினை குறிக்கும். பெண்களில் குதத்திற்கும் கருவாயின் முன்பக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் துளையினை குறிக்கும், இந்த துளையினூடாகவே குண்டலினி மேல் நோக்கிப்பயணிக்கும். சில சித்தி பெற்ற யோகிகள் இந்த அமிர்தத்தினை மாத்திரமே உணவாக கொண்டும் உயிர் வாழ்ந்து உடலினை பாதுகாத்து வந்தனர்,

குலா என்ற வார்த்தைக்கு இன்னுமொரு விளக்கமும் உண்டு. குலா என்றால் மும்முனை என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது திரிபுடி என்று அழைக்கப்படும். இது ஒரு இலட்சியத்தை நோக்கிய மூன்று உலகங்களைக் குறிக்கும். இந்த வகையில் பொருள் கொள்ளும் போது அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றுமே இந்த திரிபுடி. அறிவே சாதகனை அறியப்படுவதை நோக்கி செலுத்துவது. ஸ்ரீ வித்தையில் அறியப்படுவது லலிதாம்பிகை ஆவாள். ஆன்ம சித்தி பெறும் போது அறியப்படுவது, அறிவு, அறிபவன் ஆகிய மூன்று ஒன்றாகும். இந்த நிலையிலேயே துவைதம் அகன்று அத்துவைதமாகிய இரண்டற்ற ஒன்றாகிய நிலை வாய்க்கும்.

குலஸங்க்கேத-பாலின்யை (91)
குல ஸம்பந்தமான ரகஸியங்களை காப்பவள்
இந்த நாமத்தில் குலம் என்ற வார்த்தை குடும்பத்தினை குறிக்கிறது. தேவியானவள் தனது உபாசகர்களது குடும்ப இரகசியங்களை பாதுகாப்பவள் என்று பொருள்.

தேவியுடன் தொடர்புடைய அனைத்தும் மிகவும் இரகசியமானவை. உதாரணமாக பஞ்சதசி, சோடஷி மந்திரங்கள். தேவியின் காமகலா ரூபம் அதிரகசியமானது. குண்டலினி ரூபம், நவாவரண பூஜை என்பவையும் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படு வந்துள்ளது. இவையனைத்திலும் பஞ்சதசி மந்திரமும், காமகலாவும் மிகவும் இரகசியமானவை. இந்த இரகசியத்தன்மை இரண்டு காரணங்களுக்காக பேணப்படுகிறது. முதலாவது இத்தகைய சக்திவாய்ந்த மந்திரங்களின் இரகசியம் வெளிப்படையாக எப்போதும் விளங்கப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அத்தகைய சக்திவாய்ந்த மந்திரங்கள் தவறானவர்கள் கைகளில் கிடைத்தால் அவர்கள் அதன் சக்தி கொண்டு சமூகத்தினை துன்புறுத்தக்கூடும் என்பதாலாகும். இரண்டாவது தேவியின் ஸ்வரூபமும் காமகலாவும் ஒருவரது தனித்த அனுபவத்தின் மூலம் பெறவேண்டியது, ஆகையால் அதனை விபரிப்பது என்பது இயலாது, ஆதலால் அவற்றை இரகசியமாக பேணினார்கள். ஆனால் அப்படி எப்போதும் இரகசியமாக பேணப்பட்டால் உண்மை விளக்கங்கள் எவர் கைகளுக்கும் கிடைக்காமல் அழிந்து போய் விடலாம் என்பதாலும் அறியவேண்டும் என்று உண்மை ஆர்வம் கொண்டவருக்கு கிடக்கவேண்டும் என்பதாலும் இந்த நூலில் ஒவ்வொரு நாமாக்களுடன் தொடர்புடைய இரகசியர்த்தங்களை வெளிபடுத்தி வருகிறோம். இந்த நாமத்தில் உட்பொருள் கூட இத்தகைய இரகசியங்களை தேவையில்லாதவர்களுக்கு கிடைக்க விடாமல் பாதுகாப்பது என்பதே ஆகும்.

குலாங்கனாயை (92)
குலஸ்திரீ போன்றவள்
கற்புடைய குடும்பத்தில் உதித்தவள் என்று பொருள். இத்தகைய பெண் தனது குடும்பத்தின் பெருமையினையும், கணவனையும், குடும்பத்தினரையும் காக்கும் வல்லமையுடையவள். இன்னொரு விளக்கத்தில் இத்தகைய பெண் பொதுவில் காணமுடியாதவள் என்று கூறப்படுகிறது. லலிதாம்பிகை இத்தகைய உயர்ந்த பெண்களில் மிக உயர்ந்தவள். அறியாமை எனும் திரையில் இருந்து பாதுகாப்பவள். சௌந்தர்ய லஹரி 09 வது பாடல் கூறுகிறது; சஹஸ்ராரத்தில் சிவனுடன் நீ மிக இரகசியமாக இணைகிறாய்.”   இதன் விளக்கம் குண்டலினியான சக்தி ஆறு சூஷ்ம சக்கரங்களை துளைத்துக்கொண்டு, இருபத்தி ஐந்து தத்துவங்களை சுத்தி செய்து, சஹஸ்ராரத்தினை அடைந்து சதாசிவ தத்துவத்துடன் இணைகிறது என்பதாகும். இந்த இணைவு தனியான தத்துவமாக சாதக்கிய தத்துவன் எனக் கூறப்படும். இந்த தத்துவமே பரப்பிரம்ம தத்துவம் எனப்படும். அதாவது லலிதாம்பிகை சதாசிவத்துடன் முழுமையா இணைந்து அடையாளம் காணப்படும் நிலை. இந்த நிலை ததாத்மையா எனப்படும். இந்த விளக்கமே கற்புடைய மகளிரின் ஸ்ரீ சம்ஹார நிலை எனப்படும்.

ஸ்ரீ வித்யா பூஜை வழிபாடு மிகவும் இரகசியமானது. இது நவாரண பூஜை எனப்படும். இந்த பூஜை சரியாக செய்யப்பட்டால் செய்பவருக்கு இப்பூவுலகில் அனைத்து பலன் களையும் தரும். இன்று செய்யப்படும் நவாரண பூஜைகளில் பெரும்பாலாவை தற்பெருமைக்கும் தமது சிறப்பினை காட்டுவதற்காகவும் செய்யப்படுபவை. லலைதையின் வழிபாட்டில் இத்தகைய போலிப்பெருமைக்கு இடமில்லை. இரண்டாவதாக கூறப்பட்டவற்றை விட பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செய்யப்படும் எந்த பூஜையும் பலனளிக்காது. பலர் தமது வசதிக்கு ஏற்ப பூஜைமுறைகளை மாற்றிக்கொள்கின்றனர்.

குலாந்தஸ்தாயை (93)
குலம் எனும் திரிபுடீயினுள் அறியத்தக்கதாக இருப்பவள்
குலா என்றால் நூற்களையும் குறிக்கும். தேவி இத்தகைய ஞான நூற்களின் மத்தியில் இருப்பவள் என்று பொருள். இது பொதுவாக சரஸ்வதி அமிசத்தினை குறிப்பதாக கொள்ள வேண்டும். அட்சரங்களின் தெய்வம். அவளே அனைத்து நூற்களுக்கும் மூலமானவள். அத்துடன் சூழுமுனை எனப்படும் முண்ணாணினையும் குலாவின் பாதை எனக்குறிப்பிடப்படும். முன்னைய 90 வது நாமத்தில் கூறப்பட்ட திரிபுடியில் விபரிக்கப்பட்டதன் படி தேவி அறியப்படுபவளாக இருக்கிறாள். அவளே குலாவின் அறிவிற்கு மூலமாக இருக்கிறாள். இங்கு குலா என்றால் சக்தி எனப்பொருள் படும். சக்தி எங்கும் வியாபித்திருப்பது. இந்த நிலை கேனோப நிஷத்தில் “பிரதிபோத விதிதம்” என விபரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “சாதகனின் அனைத்து நிலைகளிலும் அறியப்படுவது என்பதாகும்.

கௌலின்யை (94)
கௌலினி வடிவினள்
தேவி கௌல வழிபாட்டின் மூல வடிவானவள். கௌல வழிபாடு என்பது சாக்த வழிபாட்டில் காணப்படும் ஒரு தாந்திரீக முறையாகும். இந்த வழிபாட்டில் தேவியே நடுமையமாக விளங்குவதால் கௌலினி எனப்படுகிறாள். சர்வவியாபகமாக காணப்படும் தேவி அனைத்திலும் வழிபடப்படுவதால் கௌலினி எனப்படுகிறாள் (முன்னர் விபரிக்கப்பட்ட திரிபுடியின் படி: அறிபவன், அறிவு, அறியப்படுபவன்).  தந்திர சாஸ்திரத்தின் படி சக்தி குலா எனவும், சிவம் அகுலா எனவும் அழைக்கப்படுவர். இவற்றின் இணைவு சஹஸ்ராரத்தில் நடைபெறும். இந்த இணைவு கௌலா எனப்படும். இந்த நிலையில் தேவி குணடலினி என அழைக்கப்படுவாள். சில தந்திர சாஸ்திர நூற்களில் சஹஸ்ராரத்திற்கு கீழே இன்னுமொரு ஆயிரம் இதழ் தாமரை காணப்படுவதாகவும் அதன் நடுவில் குலதேவியும் இதழ்களில் அவளின் சக்திகளும் வழிபடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கௌலினி என்பது இந்தக் குலதேவியினையும் குறிக்கும். அதாவது ஒரே பரம்பரையினை தருபவள் என்று பொருள். இந்த சஹஸ்ர நாமத்தினை செய்த வாக்தேவியரில் ஒருவரின் பெயரும் கௌலினி என்பதாகும். புறவழிபாடாக செய்யப்படும் ஸ்ரீ சக்கர வழிபாடும் கௌலினி எனப்படும்.

குலயோகின்யை(95)
மானசீக யோகசாதனையிற்கு உரித்தானவள்
இங்கு குலா என்பது மானசீக வழிபாட்டினை குறிக்கிறது. ஆறு சக்கரங்களிலும் மனதால் செய்யப்படும் சாதனையினை குறிக்கும். இத்தகைய மானசீக வழிபாடு யோக மார்க்கத்தினால் மட்டுமே செய்யமுடியும். குலா என்பது மூலாதாரத்தினையும் அகுலா என்பது சஹஸ்ராரத்தினையும் குறிக்கும். இவற்றை இணைக்கும் பயிற்சியே யோகம் எனப்படும். இதனைச் செய்பவள் தேவி, அதனாலேயே குலயோகினி எனப்படுகிறாள்.

அகுலாயை (96)
குலத்திற்கப்பாலிருப்பவள்
தேவியிற்கு குலம் இல்லை அதனால் அகுலா என அழைக்கப்படுகிறாள். அவள் சிவனால் உருவாக்கப்பட்டவள் ஆதலால் அதற்கு முந்தைய பரம்பரை அவளிற்கு இல்லை. அகுலா என்றால் குலத்திற்கு அப்பாற்பட்டது என்று பொருள். அதாவது ஆறு சக்கரங்களுக்கு அப்பாற்பட்டது. அது சஹஸ்ராரத்தினை குறிப்பது. சஹஸ்ராரம் ஒரு சக்கரமாக குறிப்பிடப்படுவதில்லை. சுஷும்னா நாடி தனது இருமுனைகளிலும் இருதாமரைகளை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. உச்சியில் காணப்படுவது அகுல சஹஸ்ராரம் எனப்படும். அவள் அங்கு வசிப்பதால் அகுலா எனப்படுகிறாள். மற்றைய முடிவில் காணப்படுவது குல சஹஸ்ராரம். குல சஹஸ்ராரம் என்பது நான்கு இதழ்களைக்கொண்ட மூலாதாரச் சக்கரத்தியனை குறிப்பது அன்று.


90 வது நாமத்திலிருந்து 96 வரையுள்ள நாமாக்களில் குலா என்ற வார்த்தை எப்படி வெவ்வேறாக பொருள் கொள்ளப்படுகிறது என்று பார்த்தோம். இந்த நாமத்தின் சிறப்பழகு என்னவென்றால் 90 நாமம் தேவியை குல அமிர்தத்தினை இரசிப்பவள் எனத்தொடங்கி இந்த நாமத்தில் குலத்திற்கு அப்பாற்பட்டவள் என்று முடிகிறது. 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...