ஏன் ஒரு சமூகம் முன்னேறுவதில்லை என்றால் அவர்கள் தமக்குள் ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதுவே அவர்கள் அடைய வேண்டிய வளர்ச்சி என்று நம்பிக் கொண்டு இருப்பதால்.
மாத்தளையில் கணித விஞ்ஞான தொழில் நுட்பத்தில் எமது பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழகம் எப்படி இருக்கும், அங்கு ஏன் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாக்கப்பட வேண்டும்.
அதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்துவது எப்படி என்று சிந்தித்து மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale அப்படியொரு உத்வேகத்தைத் தரும் ஒருவர் எமது பிள்ளைகளுக்கு வழிகாட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது.
மலையகத்தில் கணித விஞ்ஞான தொழில் நுட்ப கல்வியின் முன்னோடி, மலையக சமூகத்திலிருந்து கற்று இன்று பொறியியல் துறையில் சிறந்ததொரு ஆளுமையாக இருக்கும் கலாநிதி நவரட்ணராஜா Nava Navaratnarajah அவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்.
அவர் நேற்று பாக்கியம் தேசிய கல்லூரியில் கணித விஞ் ஞான தொழில் நுட்ப கல்வி மாத்தளை இந்து தேசிய கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, இரத்தோட்டை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் பயிலும் கணித விஞ்ஞான தொழில் நுட்ப மாணவர்களுக்கு உயர்தரப் பரிட்சையில் STEM மாணவர்களுக்கு இருக்க வேண்டிய உத்வேகத்தினைப் பற்றியும் ஒரு சில தொழில் நுட்ப பாட அலகுகளையும் கற்பித்தார்.
மிக அதிகம் கற்றவர்களில் பலர் தமது சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தில் குறியாக இருக்கும் போது வெகுசிலரே சமூகத்திற்கு தமது நேரத்தையும், ஆற்றலையும் முதலிடுபவர்கள். அத்தகைய ஒரு அரிய சமூக அக்கறை கொண்ட மனிதர் கலாநிதி நவா அவர்கள்! அவருக்கு எங்கள் பிள்ளைகளுக்கு உத்வேகம் தந்து வழிகாட்டியமைக்கு மாத்தளைக் கல்விச் சமூகம் சார்பில் நன்றிகள்!
இந்த நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு தந்த பாக்கியம் தேசிய கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளாதேவி அம்மையாருக்கு, பொறுப்பாசிரியர்கள், மாத்தளை இந்து தேசியகல்லூரி அதிபர், பொறுப்பாசிரிகள், இரத்தோட்டை இந்துக்கல்லூரி அதிபர் பொறுப்பாசிரிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.