எமது புதுவருட சங்கல்பத்தில் நாம் வாழும் மாத்தளைச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது என்று சங்கல்பித்து 25 நாட்களுக்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுக்கும் இந்த வருடம் க. போ. த சாதாரண தரப் பிரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணிதச் செயலட்டைகளை வழங்கும் பணியில் ஒருபகுதியை எனது சிருஷ்டி நிறுவகம் மூலம் நிதி வழங்கி இந்தப் பணி நிறைவேறப் பங்காளராகியுள்ளது. இன்னும் பலர் இந்தப் பணிக்கு உதவியுள்ளார்கள்.
சிருஷ்டி புராதன ஞானத்தினை நவீன மனங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று உலகெங்கும் உள்ள சில நூறு மாணவர்களுடன் சிறப்பாக இயங்குகிறது.
மாத்தளையின் கல்வி வளர்ச்சிப் பணியில் பாரிய பங்களிப்பினை களத்தில் செய்து வரும் சுபீட்சம் அறக்கட்டளை Velayutham Sutharshan அண்ணா அவர்கள் இந்தப் பணியை தனிப்பட தொடர்பு கொண்டு பாராட்டினார். அவருக்கு எமது நன்றிகள்! எதிர்காலத்தில் சுபீட்சத்தின் பணிகளை நடைமுறைப்படுத்த என்னால் இயன்ற ஆலோசனைகளையும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கள உதவிகளையும் செய்விக்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அனைத்துப் பாடசாலை அதிபர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செயலட்டைகள் தமது மாணவர்களுக்கு உதவும் என்ற மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செயலாளர் Dr. Nishānthan Ganeshan, இயக்குனர் சபை உறுப்பினர் Sathasivam Luxsmi Kanth ஆகியோர் களத்தில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்துகிறாரகள். இந்தத் திட்டத்தின் அச்சாணி STEM-Kalvi நிறுவனர் Dr. Kumaravelu Ganesan அண்ணா அவர்கள்! அவருக்கும் எமது நன்றிகள்!
பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale தனது அறிவிப்பில் நன்றி தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.