பாடசாலைகள் தமது கணித விஞ் ஞானத் துறை ஆசிரியர் வளப்பற்றாக்குறையை எப்படித் தீர்ப்பது?
We need paradigm shift - மாத்தியோசி
தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்தான்; அண்மையில் மாத்தளையில் கணித விஞ் ஞானத் துறையில் ஏற்படும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி ஆராய்ந்த போது கீழ்வரும் காரணங்கள் அறியப்பட்டன;
மாத்தளையில் கணித விஞ்ஞானத் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிகக்குறைவு; கல்வி அமைச்சு யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ இருக்கும் ஆசிரியருக்கு இங்கு நியமனம் கொடுத்தால் தொழிலைத் தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வேலைக்கு வந்தாலும் ஊரோடு இருந்து சேவை புரிய வேண்டும் என்பதற்கு அவர்களுடைய பொருளாதார, குடும்ப யதார்த்தம் ஒத்துழைப்பதில்லை; வெகுவிரைவில் இடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார்கள் இப்போது இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் மாத்தளையை வாழிடமாகக் கொண்டவர்கள். இப்போது உள்ள இளைஞர்கள் பலரும் ஆசிரியராக தொழில் ரீதியாக நியமனம் பெறுவதை விருப்ப படவில்லை; ஆனால் வேறு நல்ல வருமானம் தரும் தொழிலில் இருந்து கொண்டு பகுதி நேரம் சேவையாக கற்பிக்க எண்ணம் உள்ள பொறியிலாளர்கள், மென்பொருள் வல்லுனர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர் என அனேகர் இருக்கிறார்கள். இவர்கள் எவரும் தமது நேரத்தை பயணத்திற்கு ஒதுக்கி பாடசாலைக்கு விஜயம் செய்ய மாட்டார்கள்.
ஆனால் பாடசாலை நிர்வாகம் தன்னை தொழில் நுட்ப அளவில் தயார்படுத்திக்கொண்டு மாணவர்களை நிகர் நிலைக்கூடாக கற்கும் வளத்தினை ஏற்படுத்திக்கொண்டால் எத்தனை நூறு பேர்கள் அவுஸ்ரேலியவிலிருந்து, கனடாவிலிருந்து, பிரித்தானியாவிலிருந்து, தகுதிவாய்ந்த அறிவியலாளர்களும் எமது பிள்ளைகளுக்கு சர்வதேச தரத்தில் கற்பிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இப்படி அலகுகளை, கோட்பாடுகளை நிகர் நிலையினூடக துரிதமாக முடித்தால், ஆய்வுகூடசெயல் முறைகளை அட்டவணைப்படுத்தி சிறிது காலத்திற்குள் செய்வித்து முடிப்பிக்கலாம்.
ஆகவே நாம் கற்றலில் ஒரு paradigm shift இனை ஏற்படுத்த வேண்டியவர்களாகிறோம்.
பாடசாலைகளில் தொழில் நுட்ப வளங்களை நவீன கற்றல் வளங்களுக்கு ஏற்ப எப்படி சரி செய்வது என்பதை மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தொழில் நுட்ப பிரிவின் தலைவர், இயக்குனர் சபை உறுப்பினர் திரு. ரவிசங்கர், STEM Kalvi நிறுவனர் கலாநிதி Kumaravelu Ganesan STEM-Kalvi ஆகியோர் முன்னெடுத்து வருகிறார்கள்.
ஆகவே கனம் அதிபர்களே தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கு அதிக திட்டமிடல், நேரத்தினை செலவிடுங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.