பொதுவாக மலையகத்தின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஆராயும் போது கணிதப் பாடம் மிகக் குறைந்த சித்தி விகிதத்தினை உடையதாக இருக்கிறது.
கணிதப்பாடம் சித்தி விகிதம் குறைகிறது என்பதை நாம் பரீட்சை என்று பார்க்காமல் கணிதத்தின் முக்கியத்துவம் என்ன என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.
கணிதத்திறன் என்பது எமது புற உலகத்தின் செயற்பாடுகளை காரணப்படுத்தி ஆராயும் ஆற்றலை மேம்படுத்துகிறது.
ஒரு சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் அங்கு கணிதத்திறன் இருக்க வேண்டும்; வருவதைக் கணக்கிட்டு செலவிடும் சிந்தனை கணிதத் திறனிலிருந்து வருகிறது.
எம்மைச் சூழ உள்ள உலகத்தைப் பகுத்தறியும் சிந்தனையை வளர்க்கிறது. சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களைப் பெற கணிதம் உதவுகிறது. பகுப்பாய்வு ரீதியாக சிந்திக்கவும் சிறந்த பகுத்தறிவு திறன்களைப் பெறவும் கணிதம் நமக்கு உதவுகிறது. பகுப்பாய்வு சிந்தனை (critical thinking) என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறனைக் குறிக்கிறது. பகுத்தறிவு (Rasoning) என்பது ஒரு சூழ்நிலையைப் பற்றி தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் ஆகும். பகுப்பாய்வு மற்றும் பகுத்தறிவு திறன்கள் முக்கியம், ஏனெனில் அவை சிக்கல்களைத் தீர்க்கவும் தீர்வுகளைத் தேடவும் நமக்கு உதவுகின்றன.
கணிதம் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ள உதவுகிறது. கணிதம் சார்ந்த உலகில் வாழ்வதும், கணிதம் தெரியாமல் இருப்பதும் கண்களை மூடிக் கொண்டு ஓவியத்தை இரசிப்பது போன்றது.
சமூகம் முன்னேற கணிதத்திறன் விருத்தி அவசியம்.
இதை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்கு புரிந்துக் கொள்வார்கள். புரிந்துள்ளார்கள்! ஆனால் எப்படி எல்லா மாணவர்களையும் கணிதத்தில் சித்தியடைய வைப்பது என்பதற்குரிய கேள்வியைத் தான் நாம் ஆராயவேண்டும்?
ஆசிரியர்களே உரையாடுவோம்!
நாம் கணிதத்தை பரீட்சைப் பெறுபெறுகளாக எண்ணி சித்தி விகிதத்தைக் காட்டி திருப்தியுறாமல் ஒவ்வொரு மாணவனும் கணித சிந்தனையுடன் வளர்க்கப்படுகிறானா என்பதும் அவசியமான ஒன்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.