பொங்குதல் என்றால் இருக்கும் ஒன்று தானிருக்கும் இடத்தில் நிறைவடைந்து பெருகி மற்றவருக்கு பயனுள்ளதாக செழித்து வழிகிறது என்று அர்த்தம்.
இருக்கும் ஒரு மூட்டை நெல்லை நிலத்திலிட்டால் நூறு மூட்டை நெல்லாக வந்தால் விவசாயம் பொங்குகிறது என்று அர்த்தம்!
எம்மிடம் இருக்கும் அறிவு பொங்கி மற்றவர்களுக்கு பயன் படவேண்டும்
எம்மிடம் இருக்கும் செல்வம் பொங்கி மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.
சூரியன் பொங்கி கதிர்ப்பதால் தான் பூமியின் உணவு உற்பத்தி நடக்கிறது.
வானம் பொங்கி பொழிவதால் தான் நீர்வளம் பெருகுகிறது.
கவியின் மனம் பொங்குவதால் தான் கவிதை பிறக்கிறது!
சுக்கில சுரோணிதம் கருப்பையில் பொங்குவதால் மனிதன் பிறக்கிறான்.
இருப்பதை பொங்கிப் பகிர்ந்தால் பல்கிப் பெருகும்!
பொங்குதல் என்றால் எம்மிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், செயல், நற்பண்புகள், செல்வம், மகிழ்ச்சி எல்லாம் எம்முள் நிறைந்து மற்றர்களுக்கு பயன்படும் வகையில் பொங்கி பிரவாகிக்க வேண்டும்!
பொங்கல் பல்கிப் பெருகும் உயிராற்றலின் குறியீடு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.