"உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே."
["அகத்தியர் வாத சௌமியம் - 1200; பாடல் எண் 284 ; தாமரை நூலக பதிப்பு; சிறிது பாடபேதத்துடன் இருக்கிறது]
எப்படி பத்மம் - தாமரை சேற்றில் நிலைகொண்டு மலர்கிறதோ அப்படி உடலை பிருதிவி தத்துவத்தில் நிறுத்தி எமது ஆதார கமலங்களை மலரவைக்கக் கூடியது.
மூலாதாரம் வலுப்பெறாமல் யோகம் சாத்தியமில்லை.
கீழ்வரும் ஆறு தசைத்தொகுதிகள் இந்த ஆசனத்தில் பயன்படுத்தப்படுகிறது.
Hip Flexors - இது இடுப்பு நெகிழ்வு தசை எனப்படுவது; இடுப்பை வளைப்பதில் செயல்படும் ஒரு தசை, முழங்காலை மார்புக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் பணி இதனுடையது. இது இடுப்பு மட்டத்திற்கு மேல் காலை கொண்டு வருவதற்கு, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கும்போது நீங்கள், உங்கள் இடுப்பு நெகிழ்வு தசைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
Adductors - தொடையின் இடைப் பகுதியில் உள்ள தசைகள் கூட்டாக ஹிப் அடாக்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் நான்கு தசைகள் உள்ளன; அட்க்டர் லாங்கஸ், ஆடக்டர் ப்ரீவிஸ், அட்க்டர் மேக்னஸ் மற்றும் கிராசிலிஸ் (adductor longus, adductor brevis, adductor magnus, and gracillis). தொடை/கீழ் முனையை உடலின் மைய அச்சுக்கு நெருக்கமாக நகர்த்துவதே ஹிப் அடாக்டர்களின் செயல்பாடு ஆகும்.
Abductors - இடுப்புக் கடத்தல் தசை என்பது உடலின் நடுப்பகுதியிலிருந்து கால்களை நகர்த்துவதாகும். இந்த நடவடிக்கை தினசரி பயன்படுத்தப்படுகிறது. நாம் பக்கவாட்டில் செல்லும்போது, படுக்கையில் இருந்து எழும்பும்போது, காரை விட்டு இறங்கும்போது. ஆதரவற்ற கால் "விண்வெளியில்" விழுவதை நிறுத்த நடைப்பயிற்சியிலும் இதைப் பயன்படுத்துகிறோம்.
Hamstrings - இது தொடை எலும்புகள் மூன்று தசைகளின் குழுவாகும், அவை முக்கியமாக முழங்காலை நெகிழச் செய்யும்.
Gluteus Maximus - குளுட்டியஸ் மாக்சிமஸ் என்பது உடலில் உள்ள மிகப்பெரிய மற்றும் கனமான தசை ஆகும். இடுப்பு மூட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள அனைத்து குளுட்டியல் தசைகளிலும் இது மிகவும் மேலோட்டமானது. இது மொத்த குறுக்குவெட்டு பகுதியில் 16% ஐக் குறிக்கும் இடுப்பில் உள்ள மிகப்பெரிய தசையாகும், தசையின் செயல்பாட்டின் வளர்ச்சியானது நிமிர்ந்து இருப்பதற்கு மற்றும் இடுப்புக்கு ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது,
யோகத்தின் இந்த ஆசனத்தின் நோக்கம் உடல் நிமிர்ந்த நிலை அடைந்து தீர்க்கமான ஊர்த்துவ சுவாசம் பெறுதல்; இதை அகத்திய மகரிஷி இப்படிக் கூறுகிறார்
"ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு
அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால்
பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா
புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு
வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து
மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று
நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு
நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே."
[அகத்தியர் பரிபூரணம் 1200, பாடல் எண்: 1126; இராமசமிகோனார் பதிப்பு 1936]
{பத்மாசனம் நீண்ட பயிற்சிக்கு பிறகு அப்பியாசக்கப் படவேண்டிய ஒரு இருக்கை ஆசனம்; முறையான நீண்ட ஆசனப் பயிற்சியில்லாமல் இதை முயற்சிப்பது கால் மூட்டுக்களுக்கு ஆபத்தானது; இங்கு பகிரப்படுவது தகவல் நோக்கத்திற்கானது}
படம் power cut வேளையில் மகள் கிளிக்கியது;
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.