ஆசனம் செய்கிறோம் என்று உடலை விதம் விதமாக வளைத்து வித்தை காட்டுவதை ஹடயோகம் என் கிறோம். இன்றைய நிலையில் சிலவாரங்கள் ஹடயோக கற்கை கற்றுவிட்டு தாம் ஹடயோக ஆசிரியர்கள் என்று தம்மிடம் ஆசனம் பழகவருபவர்களை இயந்திரத்தனமாக ஆசனம் பழக்கி பின்னர் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலி என்று வரவைத்துவிட்டு மாணவன் இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் அதற்கு நீங்கள் ஒழுங்காக பயிற்சி செய்யவில்லை என்று மழுப்பி மாணவர்களை குழப்பும் ஹட யோக ஆசிரியர்களைக் காண்கிறேன். பலர் என்னிடம் இதற்குத் தீர்வு வேண்டி வருகிறார்கள்.
நாம் ஒரு அறிவினை முழுமையாகக் கற்க வேண்டும்; அதற்குப் பொறுமை வேண்டும்; ஆசனம் செய்யப்போகிறோம் என்றால் உடற்கூற்றியல் பற்றி அடிப்படை அறிவு இருக்க வேண்டும். இதைக் கற்பதற்கு பொறுமையான பயிற்சியும் அவதானமும், நீண்ட் அனுபவ கற்கையும் வேண்டும்; இப்போது படிக்கும் எல்லோருக்கும் instant noodles மாதிரி ஹதயோக ஆசிரியராகிவிடவேண்டும்; எவருக்கும் பயிற்சி செய்து சுய அனுபவ அறிவு பெற நாட்டமில்லை.
மனிதன் இருப்பதற்கும் நடப்பதற்கும் அடிப்படையானது புவியின் ஈர்ப்பு புலத்தில் தன்னை எப்படி சம நிலையுடன் வைத்திருப்பது என்பது.
ஹடயோகப் பயிற்சி என்பது எமது உடலை புவியீர்ப்பினூடன் சம நிலைப் படுத்துவதால் எமது உடலிற்குள் பிராண ஓட்டத்தைத் தூண்டும் முறையாகும்.
புவியீர்ப்புப் புலம் இல்லாத வானவெளியில் விண்வெளி ஓடத்திற்குள் ஓடத்துடன் தம்மைப் பிணைக்காமல் ஆசனங்கள் செய்ய முடியாது;
ஆகவே ஹடயோக ஆசனங்கள் பயிற்சிக்க விரும்பும் ஒரு சாதகன் தான் புவியீர்ப்புடன் சம நிலைப்படுத்தி உடலில் குறித்த பகுதியில் பிராண ஓட்டத்தினை அதிகரித்து, குறைத்து, நிறுத்தி அந்தப்பகுதியை வலிமையுறவைக்க முயல்கிறேன் என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
யோக ஆசனம் பயில்பவர்கள் தாம் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது விளங்கிக்கொள்ள வேண்டியது; ஒவ்வொரு அசைவும் புவியீர்ப்புப் புலத்தால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது என்பதும்;
1) எப்படி எமது எலும்புத்தொகுதி உடலை அசைவிக்கிறது
2) இப்படி அசையும் போது எலும்பைச் சூழ உள்ள தசைத் தொகுதியை எப்படி நரம்புத்தொகுதி கட்டுப்படுத்துகிறது
3) இதன் மூலம் அந்த அசைவின் மூலம் கட்டுப்படுத்தப்படும் திசுக்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி விளங்கியிருக்க வேண்டும்.
இப்படி விளங்கியிருந்தால் மாத்திரமே ஆசனம் நாம் சரியாகச் செய்கிறோமா, பிழையாகச் செய்கிறோமா, ஆசனம் செய்யும் போது ஏன் உடலில் வலிவருகிற்து என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆசனம் செய்வது என்பது மிருகத்தனமாக உடலை வருத்துவதல்ல; உடலிற்கு இன்பம் தரக்கூடிய ஒரு சுய உடல் அழுத்தல் (self massage) செயற்பாடு.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.