காரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் உருவாகி வன்மை அடைந்து ஸ்தூல சரீரத்தை உருவாக்குகிறது என்பதே சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையாகும்.
இந்த காரண சரீரம் ஆன்ம ஒளியாக இறைவனிலிருந்தும் மற்றைய உப ஒளிகளாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியில் இருந்து உருவாக்குவது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை.
இந்த நவக்கிரக - நட்சத்திர சக்திகளை பூமியின் உறைந்த உயிரற்ற வடிவமே தாதுவர்க்கம் எனப்படும் minerals.
இந்த உயிரற்ற தாதுக்களை உயிருள்ள தன்மைக்குள் கொண்டு வருவதே தாவர வர்க்கங்களின் தொழில். இதனால் மூலிகை வர்க்கம் மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. தாது வர்க்கம் பாவிக்க வேண்டுமானால் தகுந்த புடத்தினால் அணுத் தன்மை உருவாக்கப்பட வேண்டும். இந்த மருந்துகளை செந்தூரம்/பஸ்பம்-சுண்ணம், கட்டு என்று சொல்லுவோம். அப்படியிருந்தும் அவை பாவிக்கப்படும் போது அளவும், பத்தியமும், துணை மருந்துகளும் அவசியம்.
விலங்குகளும், மனிதனும் தனது உடலைப் போசிக்கும் நவக்கிரக நட்சத்திர சக்திகளைக் கிரக்கிக்க வேண்டுமானால் அவற்றை தாதுக்கள் உறைவித்து பூமியில் சேமிக்க, அப்படிச் சேமித்தவற்றை தாவர வர்க்கம் உயிர்த் தன்மையுள்ளதாக்க விலங்குகளும் மனிதர்களும் பயன்படுத்துகிறார்கள்.
மேற்குறித்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் ஜோதிடம் மருத்துவத்திற்குள் வருகிறது. ஒருவன் பிறக்கும் போது அவனது சூக்ஷ்ம சரீரத்தில் அவன் ஏற்ற கிரக நட்சத்திர ஆற்றல்களின் வலிமை என்பதே ஜாதகம். இந்த இருப்பை வைத்துக் கொண்டு அவன் குறித்த கர்மங்களில் -செயல்களில் என்ன நிலையை அடைவான் என்பதை அனுமானிப்பதே!
சூக்ஷ்ம சரீரம் என்ற அமைப்பு காரண சரீரத்திலிருந்து உயிர்த் தன்மையை ஸ்தூல உடலுக்கு கடத்தும் வேலையைச் செய்யும் அதேவேளை உடலிலுள்ள திரவப் பதார்த்தங்கள் அனைத்தினதும் ஓட்டத்தினைச் செம்மைப் படுத்துகிறது.
இந்த ஓட்டத்தை நாடி - பிராண ஓட்டம் என்று சித்த ஆயுள் வேதம் குறிப்பிடுகிறது. ஸ்தூல உடலில் இது இரத்த ஓட்டத்தினால் அறியப்படுகிறது. எனினும் நாடி என்பது இரத்த ஓட்டத்தினூடாக சூக்ஷ்ம உடலின் பிராண ஓட்டத்தினை அறியும் முறையாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.