ஜோதிடம் ஒரு அரிய நுண்கலை; இது வானத்திலிருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் தமது அசைவுகளின் மூலமும் கதிர்ப்பின் மூலமும் பூமியின் பிராண ஓட்டத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைக் கணிக்கும் ஒரு கணிதம்;
இந்தக் கணிதத்தை வைத்துக்கொண்டு அனுபவப்பூர்வமாக பெற்ற அனுபவங்களைத் தொகுத்து இப்படியான வானியல் மாற்றம் நிகழும் போது முன்னர் ஏற்பட்ட அனுபவங்களின் படி இப்படி நிகழலாம் என்பது சம்ஹிதை.
இப்படி கணிதத்தின் மூலம் கணித்து, நிகழவாய்ப்பிருக்கிறது என்று கூறினால் அதுவே ஜோதிடம் எனும் கலையின் உண்மையான பயன்பாடு.
கணிப்பு என்பது ஜாதகம் எழுதும் போது இருக்கும் இரண்டு கட்டங்களை வைத்துக்கொண்டு இப்படி இருக்கிறது, அவனை இவன் பார்க்கிறான், இவனை அவன் பார்க்கிறான் என்று வாயால் ஜாலம் கட்டுவதல்ல!
கணிப்புகளின் ஆதாரம் வராஹமிரரின் ப்ருஹத் ஜாதகமும், அதற்குரிய விளக்க உரையான ஸ்ரீபதிபத்ததி என்ற இரண்டு நூல்களும்; இந்த இரண்டு நூல்களிலும் தரப்பட்ட கணிதப்படி ஒரு பலனைக் கணிக்க வேண்டும் என்றால் ஒரு கிரகத்திற்கு 24 வகை பலம் (strength) கணிக்கப்பட வேண்டும்.
1) கிரக திருஷ்டி பலம்
2) உச்ச பலம்
3) கேத்திராபலம்
4) திரகோணபலம்
5) யுக்மாயுக்ம பலம்
6) இராசி வர்க்க பலம்
7) நவாம்ச வர்க்க் பலம்
8) திரக்கோண வர்க்க பலம்
9) துவாதசாம்ச வர்க்க பலம்
10) சம்த்தமம்ச் வர்க்க பலம்
11) ஓராவர்க்க பலம்
12) திரிம்சாம்ச வர்க்க பலம்
13) நத உன்ன பலம்
14) தினராத்ரி திரிபாக பலம்
15) தினபலம்
16) மாச பலம்
17) வருஷ பலம்
18) ஓரா பலம்
19) பட்ச பலம்
20) அயன பலம்
21) கிரக யுத்த பலம்
22) நைசர்க்கிக பலம்
23) திக்கு பலம்
24) ஜெஷ்டா பலம்
இவற்றையெல்லாம் தொகுத்து ஆறு குழுவாக்கி ஷட்பலமாக தொகுத்தால் ஒருவன் ஜாதகத்தில் சப்த கிரகங்களின் உண்மையான பலம் விளங்கும்.
Economic crisis வரப்போகிறது எல்லோருக்கும் ஆபத்து என்று சொல்கிறோம்; உண்மையில் நல்ல பணக்காரர் எவருக்கும் எந்தப்பாதிப்பும் வருவதில்லை; சிறிது தேக்கம் வரும். ஆனால் சேமிப்பும் பலமும் இல்லாதவனுக்கு பாதிப்பு அதிகமாகும்.
இதைப்போன்ற ஒரு கணிப்புத்தான் சட்பலம்; நாம் பிறக்கும் போது எமக்கு இந்தக்கிரங்களினால் எமது கர்ம பலனை நடாத்தும் நுண்மையான பலம் கிடைக்கிறது; இந்த கிரகங்களுக்கு மேற்குறித்த 24 நிலைகளால் பலம் கிடைக்கிறது. இதுவே நாம் வாங்கிவந்த சேமிப்பு. இப்போது கிரகம் தன்னுடைய வழமையான இயக்கத்தை கோட்சாரமாக நிகழ்த்தும் போது வலிமையை இழக்கும் போது - economic crisis இன் காரணமாக கம்பனி வியாபாரத்தை இழக்கும் போது - எமது ஜனன ஜாதாகத்தில் கிரகங்களின் ஷட்பலம் ஓரளவிற்கு மேல் இருந்தால் - எம்மிடம் crisis காலத்தினைக் கடப்பதற்கு தேவையான சேமிப்பு பலம் இருந்தால், அந்தக் காலத்தை நாம் மனதினைச் செம்மைப் படுத்துவதன் மூலம் எமக்குரிய வாய்ப்பாக மாற்றலாம்.
ஓருவனுக்கு அவனது ஜாதகத்தில் சப்த கிரங்களும் குறித்தளவுக்கு மேல் சட்பலத்தில் 150 - 200 புள்ளிகளைப் பெற்றால் அவன் வீணாக பயத்தை விட்டுவிட்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தான் எடுத்த காரியத்தை செம்மையாச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஸ்ரீ காயத்ரி உபாசனையில் சூரியன் ஆத்ம சக்தியாய், தேவி ஸ்வரூபமாக இருக்க அஷ்டமாவரணத்தில் அஷ்ட கிரகங்களும் இருக்கின்றன. காயத்ரியின் 24 அட்சரங்களே நாத சக்தியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் பலத்தைக் கொடுக்கிறது. ஆகவே எவர் ஒருவர் குருமுகமாய் காயத்ரி சாதனை செய்கிறார்களோ அவர்கள் கிரகபலம் - பிராண பலம் அதிகரிக்கும். பொதுவில் கோட்சாரப்படி கிரகம் வலுவிழந்திருந்தாலும் உபாசனை பலத்தால் வலிமை பெறுவார்கள்.
அன்னையை உபாசியுங்கள்! ஆற்றலைப் பெறுங்கள்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.