STEM-Kalvi இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் க.பொ. த சாதாரண தர கணிதப் பாடத்தில் சித்தியடைவதற்கான செயலட்டை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செயலட்டையின் அடிப்படை இதைப் பயிற்சிக்கும் மாணவன் தான் ஒரு சாதாரண சித்தியைப் பெறுவதற்கு கட்டாயம் கணிதத்தில் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து அமிசங்களையும் தெரிந்து கொள்வான்.
இது ஒரு இலக்குச் சோதனை முறையாகும்; ஒவ்வொரு வினாத்தாளினை செய்யும் போதும் தனது கணிதத் திறனை வளர்த்துக்கொள்வான்.
மேலும் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தனது அங்கத்தவர்களில் (பொறியியலாளர்கள், கணித, விஞ் ஞான பட்டதாரிகளிடம்) தமது நேரத்தை ஒதுக்கி தேவைப்படும் மாணவர்களுக்கு இவற்றை விளங்கப்படுத்தி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
எமது இலக்கு மாத்தளை தமிழ் பாடசாலைகளில் கணிதப்பாடம் 100% சித்தியைப் பெற வேண்டும் என்பதாகும். அனைத்து அதிபர்களும் மனமுவந்து ஒத்துழைப்புத் தருகிறார்கள்.
இதை மாத்தளை மாவட்டத்தில் உள்ள 17 தமிழ் பாடசாலைகளுக்கு STEM-Kalvi இனது ஆலோசனையுடன் அச்சிட்டு வழங்கும் பணியை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் -
Forum For Tamil Graduates of Matale ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.
இந்த செயலட்டையை அச்சிடுவதற்கு தேவையான பாதித் தொகையை எனது நிறுவனமான SRSTI வழங்குகிறது. மாத்தளையின் கல்வி வளர்ச்சிக்கு இந்தப் பணியில் உதவ ஆர்வமுள்ளவர்கள் ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan இனைத் தொடர்பு கொள்ளலாம்.
கணிதத்தில் சித்தியுறுவது என்பது ஒரு மாணவனின் வாழ்க்கையில் கல்வியின் அடிப்படைத் தகுதிகளின் ஒன்றாகும்! இதன் மூலம் நாம் எமது சமூகத்தில் தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு உள்ளவர்களை உருவாக்க முடியும்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு மாத்திரம் இதைப் PDF ஆகப் பெற்று நீங்கள் அச்சிட்டுக் கொடுக்க முடியும்; ஆனால் எமது சமூகத்தில் இதை அச்சிட்டுக் கொடுக்க முடியாத வசதியற்ற பெற்றோர்களும் இருக்கீறார்கள்; ஆகவே அனைத்துப் பிள்ளைகளுக்கும் இந்த வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்த இந்த திட்டத்திற்கு இயலுமான ஒத்துழைப்பினை வழங்குங்கள்.
Nishānthan Ganeshan இனது உள்பெட்டியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறுங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.