சிலமாதங்களுக்கும் முன்னால் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் கற்க வேண்டும் என்ற தீராத ஆவல் மனதிற்குள் உண்டாகியது சிவ ஞானபோத மறுபடியும் கற்றல் நடைபெற ஆரம்பித்தது!
படிக்க ஆரம்பித்த பின்னர் ஆச்சரியம் காத்திருந்தது மாதவ சிவ ஞான யோகியார் அகத்திய குலத்தவர் என்பதும், அந்த நூல் படிக்கும் உந்தல் சக்தி பாதத்தினால் வருவது என்பது!
அதற்கடுத்து சிவகீதை - இந்த நூல் பலவருடங்களுக்கு முன்னர் தம்பி Hari Arul அண்ணா இராமருக்கு அகத்திய மகரிஷி உபதேசித்த நூல் என்று ஒரு பிரதி தந்திருந்தார்; அதன் பின்னர் கொரோனாக்காலத்தில் இலங்கை சைவ நெறிக் கழகம் தமது வெளியீட்டில் கடந்த மாதம் வெளியிட்ட பிரதியொன்று தம்பி Krishnakumar Prathapan இடமிருந்து கிடைத்திருந்தது, https://www.tamildigitallibrary.in/ தளத்தில் இருக்கும் பிரதியொன்றுமாக கிடைத்தது.
சிவகீதை அருமையான சிவயோக நூல் மானுட இராமன் பலமற்று அசுரகுணமாகிய இராவணனால் தனது சக்தியாகிய சீதையை இழந்தபோது அகத்தில் ஒளியேற்றி அகத்தியர் சிவபரத்துவத்தால் எப்படி அசுரகுணத்தை வெல்வது என்ற யோக இரகசியத்தைச் சொல்லும் நூல்! மானிடன் அசுரகுணத்தால் தனது சக்தியையும், தெய்வத்தன்மையை அடையும் வாய்ப்பினையும் இழக்கிறான் என்றும் அது குருவருளால், தீட்சையால், தபஸினால் வென்று சிவமாதல் என்ற சிவயோகத்தைக் கூறும் நூல்.
இரண்டு நூல்களும் அகத்திய மகரிஷியோடு தொடர்பு பட்டிருந்தது மிகச் சிறப்பான விடயம்;
மூன்றாவது கடந்த 2022 வருடத்தில் 60% விலைகழிவில் Routledge - Taylor & Francis Group இந்தியப் பதிப்புகள் ஒருதொகை கிடைத்தது. இலங்கையில் இனிமேல் வாழ்க்கைக்கு விலைகொடுத்து புத்தகம் வாங்க முடியாது என்பதால் அப்படியே அள்ளிவிட்டேன்; மெய்யியல், அறிவியல், உளவியல், கல்வியியல், மறையியல் நூல்கள் ஒரு தொகை இதில் அடக்கம்; இதில் அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் " The meaning of
Relativity" நூல் வருட இறுதி நாட்களின் வாசிப்பானது. இந்த நூல் மிகச் சுவாரசியமானது.
அகத்தியர் சௌமியசாகரத்திலும், சிவசிந்தாந்தத்திலும் தத்துவங்கள் 36 என்பது அதில் வித்யா தத்துவங்கள் எனப்படும் 07 தத்துவங்கள் பிரபஞ்ச படைப்பின் எல்லைகளைக் குறிப்பிடப்படுகிறது. இவை கஞ்சுக தத்துவங்கள் - limiting factors of
universe எனப்படும். அவையாவன
niyati - நியதி - இடம் =limitation of place
kāla - காலம் = limitation of time
rāga - இராகம் - பற்று = limitation of
attachment
vidyā - வித்தை = limitation of knowledge
kalā - கலை = limitation of action (creativity)
māyā - மாயை = illusion of individuality
ஐன்ஸ்டீன் தனது நூலறிமுகத்தை இப்படித் தொடங்குகிறார்;
சார்பியல் கோட்பாடு இடம் மற்றும் நேரம் கோட்பாட்டுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இடம் மற்றும் நேரம் பற்றிய நமது கருத்துக்களின் தோற்றம் பற்றிய சுருக்கமான விசாரணையுடன் தொடங்குகிறேன்,
The theory of
relativity is intimately connected with the theory of space and time. I shall
therefore begin with a brief investigation of the origin of our ideas of space
and time,
இதை எமது சைவசித்தாந்த - சாக்த - சித்தர் முப்பத்தாறு தத்துவ மொழியில் ஐன்ஸ்டீன் சொன்னதை இப்படி மொழிபெயர்க்கலாம்;
The theory of
relativity is intimately connected with the theory of space {niyati - நியதி - இடம் =limitation of place}
and Time {kāla - காலம் = limitation of time}.
I shall therefore begin with a brief investigation of the origin of our ideas
of space (niyati - நியதி - இடம் =limitation of place) and time {kāla - காலம் = limitation of time},
ஐன்ஸ்டீன் மிகத்தெளிவாக காலத்தையும் இடத்தையும் தர்க்க ரீதியாக அறிவியலுடன் இணைப்பதற்கான அளவியல் முறையைப் பற்றி இந்த நூலில் ஆராய்கிறார். மிகச் சுவாரசியமாக இவற்றை எமது சித்தாந்த மெய்யியல் தத்துவங்களுடன் இணைத்து நாம் சிந்திக்க முடியும். இதற்கு முறைப்படி அறிவியலும் சித்தாந்தமும் பயின்ற ஆய்வாளர் தேவை.
இந்தப் பதிவுகள் சும்மா ஆர்வத்தைத் தூண்டுவதற்கானது! இது பற்றி இன்னுமொரு பதிவில் விரிவாக உரையாடுவோம்! சிருஷ்டியின் சௌமிய சாகர வகுப்பில் விரிவாக கட்டாயம் உரையாடுவோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.