மலையகத்திற்கு மட்ராஸ் பிரசிடென்ஸியில் (தற்காலத்து தமிழ் நாட்டில்) இருந்து சிலோனுக்கு ( இலங்கை) மக்கள் தமது வாழ்வாதார முன்னேற்றம் வேண்டி இடம் பெயர்ந்த 200 வருடத்தைக் கொண்டாடுவோம் என்று ஒரு ஏற்பாடு நடைபெறுகிறது. இது கொண்டாட வேண்டியதா? அல்லது இரு நூறு வருடங்களாக ஒரு சமூகம் எத்தகைய முன்னேற்றத்தினை அடைந்தது என்பதற்கான சிந்தனை, ஆய்வுக்கான தூண்டலைத் தரும் வருடமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு சமூகம் ஏழ்மை - poverty இல் இருப்பது என்பது பற்றி பேர்னாட் ஷா தனது Major Barbara நாடகத்தில் இப்படிச் சொல்கிறார். வறுமை என்பது சமூகத்திற்கு ஏற்படுத்தபடும் மிகப் பெரிய தீமையும், மோசமான குற்றமும் ஆகும்.
ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தின் தலைமை ஆய்வு ஆலோசகராக இருந்த Duncan Green எழுதிய From Poverty to Power: How Active Citizens and Effective States
Can Change the World என்ற நூல் தனது சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு மலையக இளைஞனும் இந்த 200வது வருடத்தில் படிக்க வேண்டிய நூல்.
இரு நூறு வருடங்களும் மக்களும், அரசும் வறுமையில் இருந்து வெளிவர எதைச் செய்யத் தவறியது என்ற தெளிவைத் தரும் நூல் இது.
200 வருடங்களாக நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் அடுத்து என்ன செய்யாலாம் என்று திட்டமிடமுடியாது; வெறுமனே விழாக் கொண்டாடுவதால் சமூகம் முன்னேறிவிடாது; ஆழமான சிந்தனைக் கலாச்சாரம் உருவாக வேண்டும். இந்த நூலில் வறுமை என்பதை நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்தியா சென் தனது முகவுரையில் இப்படிப் பார்க்கும் படி கூறுகிறார்:
வறுமை என்பது வருமானப் பற்றாக்குறை தான் என்ற பழைய பார்வை நம் மனதில் நன்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதியில் வறுமையை பல்வேறு வகையான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியாமல் செய்யும் நிலை என்று நாம் பார்க்க வேண்டும்:
குறைந்தபட்ச திருப்திகரமான வாழ்க்கை நிலைமைகளை அடைய சுதந்திரமின்மை என்று வரையறுக்கலாம். குறைந்த வருமானம் நிச்சயமாக அதற்கு பங்களிக்கும், ஆனால் பள்ளிகள் இல்லாமை, சுகாதார வசதிகள் இல்லாமை, மருந்துகள் கிடைக்காமை, பெண்களை அடிமைப்படுத்துதல், அபாயகரமான சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் வேலையின்மை (பாதிக்கும் ஒன்று போன்ற பல தாக்கங்கள்) வருமானத்தை விட அதிகம். இந்த வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் வறுமையை குறைக்க முடியும். ஆனால் அதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, வசதிகள் விரிவுபடுத்தப்படுவதையும், குறைபாடுகள் நீக்கப்படுவதையும் உறுதிசெய்ய, மக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலை மேம்படுத்துவது அவசியம்.
இந்த ஆற்றல் என்பது கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனை, செயல் திறன்களுக்கான முதலீடு!
உதாரணமாக மலையகத்தில் high end IT business company இனை திறம்பட நடாத்துவதற்கான மனிதவள விருத்திக்கான முதலீடுகள் இருக்கின்றனவா?
இந்த நூல் குடிமக்களும் - அரசும் ஏழ்மையை இல்லாதாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான, நம்பகமான அறிவுரைகளை முன்வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் இன்னும் தமிழ் படுத்தப்படவில்லை என்பதால் எப்படி வாசிப்பது என்று கவலை கொள்ள வேண்டாம்.
அண்ணன் சுந்தர்பிச்சை உலகில் ஒரு மனிதன் எந்த மொழியில் உள்ள அறிவையும் தனது தாய்மொழியில் கற்கும் வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறார்.
google lense ஐயும் translator இனையும் பயன்படுத்தில் நாம் படிக்கலாம்.
மலையக கல்வி அறிஞர்கள் இந்த நூலை தமிழ்படுத்தி கலந்துரையாடல்களை ஆரம்பித்து யோசனைகளை உரையாடி சிந்தனையைத் தூண்டலாம்.
குறிப்பாக சம்பள உயர்வு தான் தீர்வு என்று போர்க் கொடி பிடிக்கும் அரசியல் தலைவர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் அதற்கு மேலும் சென்று உண்மையான சமூக முன்னேற்றத்திற்கு நாம் உழைக்க முடியும் என்ற சிந்தனையைப் பெறலாம்.
இந்த நூலைப் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் +94776271292 இற்கு வாட்ஸப் மூலம் அறியத் தாருங்கள் அனுப்பி வைக்கிறேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.