ஸ்ரீ அரவிந்தர் யோக இலக்கியங்கள் சிருஷ்டியின் வகுப்பாக நடைபெறுகிறது. இந்த வகுப்பில் உரையாடப்பட்ட ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் சைத்திய புருஷன் என்ற சொல்லின் விளக்கக் குறிப்புகள்.
_______________________________________
A. சைத்திய புருஷன் / psychic being
1) சைத்திய புருஷன் என்பது எமது ஆன்மாவில் இருக்கும் இறையின் ஒரு தீப்பொறி போன்ற ஒரு கூறு. இந்தக்கூறு வளர்ச்சியடைந்து ஒரு முழுமையை அடைய முடியும். அதாவது ஒரு சிறிய பொறியாக எல்லோரிலும் இருக்கும் இந்தக்கூறு படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒரு முழுமையை அடையும் போது இதை நாம் சைத்திய புருஷன் என்று கூறுகிறோம்.
2) சைத்திய பகுதி தெய்வீக கூறாக இருந்தாலும் அளவி சிறியதாக இருப்பதால் இது தெய்வ சக்திகளைக் கொண்டிருப்பதில்லை; இந்தப்பகுதி வளர்வதன் மூலம்தான் மனிதன் தெய்வமாகிறார்.
3) இந்தக் கூறு இருப்பதால் தான் மனிதன் தெய்வத்தன்மையுடையவனாக ஆவலுடையவனாகிறான். சத்தியத்தையும், ஒளியான தன்மையையும் கொண்டு தெய்வ உணர்வு நோக்கி எமக்குள் உந்தித் தள்ளும் பகுதி சைத்தியக் கூறு எனப்படுகிறது.
4) சைத்திய புருஷன் என்பதை வரையறுக்க முடியுமா என்று ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதற்கு கீழ்வருமாறு பதிலுரைத்தார்; அப்படி வரையறுக்க முடியாது என்று பதிலளித்தேன். விலங்குகளிலோ அல்லது பெரும்பாலான மனிதர்களிலோ உள்ள சைத்திய புருஷர் அதிமனதுடன் நேரடி தொடர்பில் இல்லை-எனவே அதை வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனால் இது அதிமனதுடன் தொடர்பு படுத்தப்பட்டால் எமது சாதாரண மனம், பௌதீக உடல், பிராணன் ஆகியவற்றை விட வலிமையான ஒன்றாக செயற்படும். மனம், பிராணன், உடல் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து துணையாகிச் செயற்படும். ஆனால் சைத்திய புருஷன் இப்படிக் கலப்பின்றி தூய்மையான நிலையில் இன்றி செயற்படக்கூடியது. தெய்வஉருமாற்றம் என்பது சைத்திய புருஷனின் விழிப்பின்றி சாத்தியமில்லை.
5) சித்தமும் சைத்திய பகுதி என்பதும் ஒன்றல்ல; சித்தம் என்பது புற உணர்விலிருந்து, செயலிலிருந்து உருவாகும் ஞாபகங்களின் தொகுப்பு; சித்தத்தை அறிய நாம் மேற்பரப்பு, வெளிப்புற இயல்புகளைத் தாண்டி ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. சித்தம் என்பது வெளிப்புற உணர்வின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்,
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.