மனதால், உடலால் அனுபவிக்கக் கூடிய அனைத்து போகங்களையும், அவை சித்தத்தில் ஏற்படுத்தும் இன்ப உணர்ச்சிகளை காக்கையின் மலம் போன்று கருதத் தக்க மனப் பண்பினைப் பெறுதல்.
இறந்த பின்னர் சொர்க்கம் கிடைக்கும், கடவுளைக் காணலாம் அதனால் பல நன்மைகளைப் பெறலாம், இப்படி இச்சைகளை வைத்துக் கொண்டிருக்கும் மனம் வைராக்கியம் அற்றது. குறிப்பாக ஒரு பலனை நிர்ணயித்துவிட்டு அது கிடைத்தே தீர வேண்டும் என்ற அவாவினை ஏற்படுத்தி விட்டு அதற்கு ஏற்றால் போல் காரியம் ஆற்றுவது மலம் - அசுத்தமுடைய சித்தமாக யோகத்தில் கொள்ளப்படும்.
ஒரு செயலை எடுத்தால் அந்தச் செயலை எப்படி முடிப்பது, அதன் பலன் எனக்கு தனிப்பட இன்பம் தருமா துன்பம் தருமா என்று சிந்தித்து அதன் மேல் பற்றுவைக்காத மனநிலை.
எந்த இச்சையும் இல்லாமலிருப்பதற்கு பெயர் வைராக்கியம்;
இந்த வைராக்கியத்தை பதஞ்சலி இரண்டு வகையாக (வைராக்கியம், பரவைராக்கியம்) என்று பிரித்தாலும் இவை நான்கு வகை;
1) யதமானம்
2) வியதிரேகி
3) ஏகேந்திரியம்
4) வசீகாரம்
சிலருக்கு மந்தமான வைராக்கியம் இருக்கும்; புலன்கள், ஆசைகள், பற்றுக்கள் எல்லாம் தன்னை கீழே இழுக்கின்றது என்பது நன்றாகத் தெரியும்; சிறிது முயற்சி செய்தும் பார்ப்பார்கள்; ஆனால் காலம் வரட்டும் செய்து முடிப்போம் என்று இருக்கும் வைராக்கியம் யதமான வைராக்கியம்.
வியதிரேகி - குரு, வைராக்கியமுடையவர்களது சேர்க்கையைக் கண்டவுடன் உருவாகும் வைராக்கியம்; தன்னிடமுள்ள துர்குணங்களை நீக்கி நற்குணங்களை உருவாக்கிக் கொள்வதில் உண்டாகும் உற்சாக வியதிரேகி வைராக்கியம். இவர்கள் சத்சங்கம், குரு உடனிருந்தால் வைராக்கிய சீலர்கள்; இல்லையென்றால் தன்னிலை தளர்ந்து விடுவார்கள்.
இந்திரியங்களை முழுவதும் அடக்கி தனது கட்டுப்பாட்டில் இயக்கும் வல்லமை உள்ளவனுக்கு ஏகேந்திரிய வைராக்கியமுடையவன் என்று பெயர்.
மனம் எதைக் கண்டு குதிக்காமல், தாழாமல் சமத்துவ தன்மையை அடைந்ததாவரும் வைராக்கியத்திற்கு வசீகர வைராக்கியம் என்று பெயர்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.