சித்தர்களின் யோக முறையை ஒரு படிமுறையாக எப்படிப் புரிந்து கொள்வது என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு சிறு விளக்கம்
யோகத்திற்கு மூன்று கருவிகள் அவசியம் மனம், உடல், பிராணன்; இந்த மூன்றில் இரண்டு கருவிகளை சித்தி செய்து கொள்வது (mastery) அவசியம்; இதன் அர்த்தம் மூன்றாவது கருவி அவசியம் அல்ல என்பதல்ல! சாதனை முறைகளில் கட்டாயம் இரண்டு கருவிகள் பிரதானமாக இருக்கும்; மூன்றாவது சற்று குறைவாக உபயோகப்படுத்த வேண்டி இருக்கும்.
இந்த அடிப்படையில் சித்தர்களின் யோகத்தை சித்தி நோக்கத்தின் அடிப்படையிலும், இலக்கு அடிப்படையிலும் கீழ்வருமாறு பகுக்கலாம்;
ஹடயோகம் - உடலையும், பிராணனையும் பிரதானமாகக் கொண்டது; பிராணனை வீணாக்காமல் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது.
மந்திர யோகம் - மனதையும் பிராணனையும், பிரபஞ்ச நாத சக்தியையும் அடிப்படியாகக் கொண்டது; மனதை உயர்த்துவதன் மூலம் உயர் உணர்வு நிலை அடைவதை இலக்காகக் கொண்டது.
லய அல்லது வாசி யோகம் - மந்திரமாகிய பிரபஞ்ச நாத சக்தியையும், பிராணனையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளிருக்கும் குண்டலினியை விழிப்பிப்பதை அடிப்படையாகக் கொண்டது.
சாங்கிய இராஜ யோகம் ஆன்ம தத்துவங்கள் 24 இனை சித்திசெய்வதை நோக்கமாகக் கொண்டது.
தாரக இராஜயோகம் மனதை தாரணைக்கு யோக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.
அமனஸ்க இராஜயோகம் மனதினை ஸாமதி அனுபவத்தில் கரைப்பதை இலட்சியமாகக் கொண்டது.
சிவயோகம் இலட்சியம் என்பது சிவத்தை தவிர வேறு எதுவுமில்லை என்ற பரவைராக்கியத்தை நோக்கமாகக் கொண்டது.
இப்படி யோகத்தில் எவ்வளவோ படிமுறைகள், நுணுக்கங்கள் இருக்கின்றது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.