தற்போதைய கல்வி முறையில் இருக்கும் பெரிய வழு மாணவர்களை கற்கத் தூண்டாமல் ஒரு சில ஆசிரியர்களை கடவுளர்கள் போல் பிம்பம் அமைத்து அந்த ஆசிரியரிடம் படித்தால் பரீட்சை சித்தியாகும் என்று பிள்ளைகளை அலைக் கழித்து இறுதியில் ஊன்றி, கவனித்துப் படித்திருந்தால் சிறப்பு பெறுபேறு பெற வேண்டிய பிள்ளையை சாதாரணமான சித்தி ஆக்கும் செயலைச் செய்வதாகும்.
மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை, எதையும் கற்பிக்க முடியாது என்பதேயாகும்.
ஆசிரியர், பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலை வாங்கும் மேலாளரோ அல்லர், அவர் உதவியளித்து வழிநடத்துபவர் ஆவார்.
கருத்துக்களைச் சுட்டிக் காட்டுவதே அவருடைய பணியாகும், அவற்றை வலியச் சுமத்துவதன்று. உண்மையில் ஆசிரியர் மாணவனின் மனத்துக்குப் பயிற்சியளிப்பதில்லை, மாணவன் தன் அறிவுச் சாதனங்களை எவ்வாறு செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவனுக்குக் காட்டி, அதில் அவனுக்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுகிறார்.
அவர் மாணவனுக்கு அறிவைக் கொடுப்பதில்லை, அவன் எவ்வாறு தன் முயற்சியால் அறிவை எய்தக் கூடும் என்பதை அவனுக்குக் காண்பிக்கிறார்.
ஆசிரியர் உள்ளிருக்கும் அறிவை வெளிக் கொணர்வதில்லை; அறிவு எங்கே புதையுண்டு கிடக்கிறது என்பதையும், அதை எவ்வாறு மேற்பரப்பிற்கு அடிக்கடி எழுந்து வருமாறு பழக்கப்படுத்தலாம் என்பதையும் அவர் அவனுக்குக் காண்பிக்கிறார்.
என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்
ஆகவே பாடசாலைகள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் தமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வரக்கூடிய களங்களை அமைப்பவையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.