சிறுவயது முதல்
மறையியல், மனோ சக்தி ஆகியவற்றில் ஆர்வம் இருப்பதால் சோதிடமும் கற்றேன். எனது
குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார், அவர் தந்தை குருசாமி சாஸ்திரியார் எல்லாம்
பெரிய ஜோதிடர்கள். கண்ணைய யோகியார் கிரகங்களையும், பிராண காந்த அலைகளையும் வைத்து
ஜோதிடம் கணிக்கும் முறையை ஏற்படுத்தியிருந்தார். அதை ஜீவகாந்த ஜோதிடம் அல்லது யோக
ஜோதிடம் என்றும் சொல்வார்; ஜோதிடப் பாடங்கள் எழுதியும் பயிற்றுவித்திருக்கிறார்.
"கிரகங்கள்
மனிதனது சித்தத்தை தூண்டியே கர்மங்களை செயற்படுத்துகிறது; யோக சாதனையால் சித்த
விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் கிரகப் பிரபாவங்களின் தூண்டலைத்
தடுக்கலாம்" என்பது கண்ணைய யோகியாரது உபதேசங்களில் ஒன்று; ஆகவே யோகத்தில்
இப்படி நடக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பலன் சொல்லி மக்கள் மனதைக்
குழப்புவதற்கு ஜோதிட சாஸ்திரம் பயன்படுவதில்லை!
சோதிட விதிகளின் மூலம்
ஒருவன் துல்லியமாக தான் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மங்களின் கணக்கினை
கணக்கிட்டுக் கொண்டு, பிறகு திசாபுத்தி, கோட்சாரம் நடக்கும் போது தனது சித்தத்தை
எந்தக்கிரகங்கள் தூண்டி தனது விதியினைச் செயற்படுத்தும் என்பதைத் தெரிந்து அதற்கந்த
கிரக சாதனைகளைச் செய்வதன் மூலம் எமது கர்ம பிரபாவங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக்
குறைக்கலாம்; இறையருளும் சாதனை மூலம் இச்சாசக்தியையும் பெற்றிருந்தால் கிரகங்கள்
சித்ததைத் தூண்டும் கர்ம பிரபாவங்களை வெல்லலாம் என்பது யோக ஜோதிடத்தின் அடிப்படை.
காயத்ரி தேவியினுடைய உபாசனையில்
சூரியனின் ஆத்ம சக்தி தேவியாக இருக்க மற்றைய எட்டு கிரகங்களும் அஷ்டமாவரணமாக
வரும். காயத்ரி உபாஸனை செய்பவன் நவக்கிரக சாதனை மூலம் தனது கிரகப் பிரபாவங்கள்
மூலம் வரும் இன்னல்களைத் தடுக்கலாம்.
காயத்ரி சாதனை
கிரகபிரபாவங்களை சீர்ப்படுத்துவதில் ஒரு அரிய முறை.
தினசரி காலையில்
காயத்ரி சாதனையுடன் நவக்கிரக சாதனைகளும் நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள் கலந்து
கொண்டு பயன்பெறலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.