Two basic thoughts of
occultism
மறையியல் என்றால் மனம்
முதலான அகக்கருவிகளை நுண்மையாக்கி இந்த பிரபஞ்சத்தினைப் பற்றி நுண்மையான அறிவினைப்
பெறும் வழி என்பதை ஏற்கனவே வரையறுத்திருக்கிறோம்.
ஒருவன் மறையியலின் படி
அறிவினைப் பெறவேண்டுமானால் இரண்டு அடிப்படை சிந்தனைப் போக்கு அவனிற்கு இருக்க
வேண்டும். இந்த இரண்டு எண்ணங்களும் அவனுக்கு சரியான முறையில் இருக்குமாக இருந்து,
நம்பிக்கையுடன் மறையியல் பயிற்சியில் ஈடுபடுபவனாக இருந்தால் அவன் பல சூக்ஷ்ம
உண்மைகளை அனுபவிக்கக் கூடியவனாக இருப்பான்.
முதலாவது எமது
கண்களுக்குத் தெரியும் உலகத்திற்கு மறைவாக, புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்மையான
உலகம், இயக்கம் ஒன்று இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை. அதன் அடிப்படையில்தான்
பௌதீக உலகம், செயல்கள் தோற்றம்பெறுகிறது. நாம் புலன்வழி அதிகம் செல்லும் போது இந்த
நுண்மையான, ஆழமான சூக்ஷ்ம உலகை அறியும் திறனை இழக்கிறோம் என்பதும்,
இரண்டாவதாக தனது அந்தக்கரணங்கள்
(மனம், புத்தி, சித்தம் ஆங்காரம்) ஆகியவற்றினை நுண்மைப்படுத்தி திறன்களை
வளர்ப்பதன் மூலம் இந்த மறைவான, நுண்மையான உலகத்திற்குள் ஊடுருவி அறிவினைப் பெற
முடியும் என்பது.
பதஞ்சலி யோகத்தில்
சித்த விருத்திகளை அடக்குவதன் மூலம் உருவாகும் சமாதி நிலையால் மனம் நுண்மையாகி
ருதம்பரா பிரக்ஞை என்ற பேரறிவு உருவாகுவதாகக் கூறுகிறார்.
காயத்ரி சாதனை
தொடர்ச்சியான காயத்ரி ஜெபத்தினால் பலவிதமான நுண் ஆற்றல்கள் மனதிற்கு கிடைப்பதாக
கூறுகிறது.
ஹடயோக பிரதீபிகை
தொடர்ச்சியான ஹடயோக அப்பியாசத்தால் சாதகன் உன்மணி அவஸ்தையில் லயித்து மனோன்மணி
நிலை பெற்று அற்புத சித்திகளைப் பெறுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.
கிரகங்களை தினமும்
உபாசிக்கும் ஜோதிடனுக்கு கிரகப்பிரபாவம் நுண்மையாக ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை
அறியும் உணர்வு வாய்க்கிறது.
ஒரு சித்த மருத்துவன்
ஸ்தூல உடலில் உருவாகியிருக்கும் நோயிற்கு சூக்ஷ்ம உடலில் பிராணன் ஓடும் ஓட்டத்தின்
நடையினை அறிந்து, காரணசரீரத்தில் முத்தோஷங்களின் நிலையறிந்து சிகிச்சை செய்ய
வேண்டும்.
இவையெல்லாம் எமது மனம்
ஸ்தூலத்திலிருந்து பயிற்சியால் நுண்மையாகி சூக்ஷ்மத்தைப் பார்க்கும் ஆற்றல் பெறுகிறது
என்கிறது மறையியல் விதிகள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.