ஔவையாரின் விநாயகர்
அகவலின் முழுமையான விளக்கம் படவடிவில் கீழே தரப்பட்டிருக்கிறது.
மூலாதாரத்தில் இருக்கும்
எலியைப் போல் தடுமாறிக்கொண்டிருக்கும் சித்தத்தை கணபதி மந்திரத்தின் துணைகொண்டு
மூளையுடன் ஏகாக்கிரத்தினால் தொடர்புகொள்ள வைத்தால் உடலில் இருக்கும் குண்டலினி
எனும் மகாசக்தி விழிப்படையச் செய்யும்.
இதையே ஔவையார்
கருத்தினில் கபால
வாயில் காட்டி
இருத்தி முத்தியினிதெனக்
கருளி
என்னை யறிவித்(து)
எனக்கருள் செய்து 55
முன்னை வினையின்
முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா
மனோலயம்
தேக்கியே யென்றன்
சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி
யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)
அழுத்தியென் செவியில் 60
எல்லை யில்லா ஆனந்
தம்அளித்(து)
அல்லல் களைந்தே
அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே
சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே
சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய்
அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற
கரும்புள்ளே காட்டி
இதுவே மூலாதாரத்தில்
கணபதி உறைகிறார் என்ற விளக்கம்.
இதைச் செய்வதற்கே
அதிகாலை - பிரம்ம முகூர்த்தத்தில் - மூலாதாரத்தில் சூக்ஷ்ம சுவாசம் ஓடும்போது
செய்வது பலனளிக்கும். இதனாலேயே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனை வழிபட
வேண்டும் என்று சொல்லப்பட்டது.
இதைத் தவிர
பிள்ளையாருக்கு யானைத்தலை பொருத்தினார் சிவபெருமான் என்று சிறுபிள்ளைத்தனமாக
இரசிப்பவர்களுக்கு அவர் அவர் மனப்பக்குவத்திற்கு தக்க ஆயிரம் கதைகள் இருக்கிறது
எமது புராணங்களில்!
அவரவர்
மனப்பக்குவத்திற்கு தக்க ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.