முருகப்பெருமானின்
யந்திரம் அறுகோணமுடைய சடாட்சர யந்த்ரம்.
இது மேல் நோக்கிய சிவ
முக்கோணமும், கீழ் நோக்கிய சக்தி முக்கோணமும் இணைந்து உருவாகும்.
சிவ ஸக்தி ஐக்கிய ரூபம்
முருகன்
அறுபத்து நான்கு சிவ
உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் சோமாஸ்கந்தர் இந்த
தத்துவத்தின் உருவ வடிவாகும்.
இது கூறும் மறையியல்
தத்துவம் என்ன?
சிவமாகிய அறிவிலிருந்து
வெளிப்பட்ட ஒளிக்கதிர்களை உடலிலுள்ள ஆறு பதுமங்கள் வாங்க அவற்றை ஸக்தி ஒன்றாக்க
முருகன் பிறந்தனன் என்பது கந்தபுராணம்.
இந்த ஆறு பதுமங்களும்
உடலின் ஆறு ஆதாரங்கள், இந்த ஆறு ஆறாதாரங்கள் ஒன்றுபட்டு இயங்கும் இடம் மூளை!
உடலுணர்வுகளை மூளை சரியாக ஒன்றிணைத்து சமநிலையுடன் செயல்புரியும் நிலையின்
குறியீடு அறுகோண சடாட்சர யந்த்ரம்.
நவீன மூளை அறிவியல்
அடிப்படையில் சொல்வதாக இருந்தால் ஒருவன் தனது வலது மூளை ஆற்றலையும், இடது மூளை
ஆற்றலையும் கலந்து எவ்வளவு சிறப்பாக ஆறறிவுடன் செயற்பட முடியும் என்பதன்
குறியீட்டு விளக்கம்தான் சடாட்சர யந்திரம் எனலாம்.
ஒருவன் சடாட்சர
உபாசனையின் மூலம் தனது வலது, இடது மூளை ஆற்றல்கள் மூலம் சமப்படுத்தும் ஒரு brain
cultivation ஆகக் கொள்ளப்பட முடியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.