வைகறையில் துயிலெழுந்தால் கண்கள் பிரகாசமாக இருக்குமாம்.
கடந்த சில வருடங்களாக
அதிகாலை 0415 இற்கு எழுந்து உலகெங்கும் உள்ள நல்ல உள்ளங்களோடு இணைந்து உயர்ந்த
விடயங்களைக் கற்கும் பாக்கியம் கொரோனா தந்தது.
அதிகாலை எழுந்தால்,
புத்தியதற்குப்
பொருந்து தெளிவாக்கும்;
சுத்தநரம்பினாற்
தூய்மையுறும்- பித்தொழியும்
தாலவழி வாத பித்தம்
தத்தநிலை மன்னும்; அதி
காலைவிழிப்பின்
குணத்தைக் காண்
புத்தி தெளிவாக
இருக்கும்; உடல் நரம்புகள் தூய்மையுறும்; மனக்கவலைகள் நீங்கும்; வாத, பித்த முதலான
முத்தோஷங்கள் சமப்படும்; இவையெல்லாம் அதிகாலை விழிப்பினால் உடலிற்கும் மனதிற்கும்
கிடைக்கும் நலம்!
இதை பிரம்ம மூகூர்த்தம்
என்று குறிப்பிடுவது ஏன்? இது இறைவனுக்குரிய நேரமாக வரையறுக்கப்படுகிறது. சூரியன்
உதிக்கும் முன்னர் இருக்கும் ஒரு முகூர்த்த நேரம் - அண்ணளவாக ஒன்றரை மணி நேரம்
பிரம்ம முகூர்த்தமாக சொல்லப்படுகிறது.
யோக தத்துவத்தில் நாம்
மூச்சு உள்ளிழுக்கும் போது பிராணன் எனப்படும் நுண்மையான உயிர்சக்தி ஆறு ஆதாரங்களில்
நிறைவதாகவும் இது மூலாதாரம் வரை செல்லும் நேரமாகவும் பிரம்ம முகூர்த்தம்
சொல்லப்படுகிறது.
இஸ்லாமியர்கள்
வஜ்ராசனத்தில் இருந்து இறைவனை நினைத்து மூச்சினை மூலாதாரத்துடன் இணைத்து இந்த
நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே நாம் பிரம்ம
முகூர்த்தத்தில் எழுந்து எம்மைவிட உயர்ந்த ஆற்றலுடன் தொடர்புபடுத்தும்போது எமது
ஸ்தூல உடல் தனக்கான சூக்ஷ்ம, காரண உடல்களிலிருந்து முழுமையான பிராண வலிமையினைப்
பெறுகிறது.
இந்த நேரத்தின்
அதியுச்ச பலனைப் பெற
1) இறைவனை நினைத்தல்
2) அறிவினைப் பெறக்
கற்றல்
ஆகிய இரண்டும்
பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மேல் உடல் உற்சாகமாக இருக்கும். இரவில் தாமதமாக
நித்திரைக்குச் செல்பவர்கள் அதிகாலையில் துயிலெழுந்து பகலில் சிறிது நேரம்
ஓய்வெடுக்கலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.