யதார்த்தத்திற்கு மீறிய
கற்பனைகள் உண்மையினை அறியவிடாமல் செய்வது மாத்திரமல்ல கேலிசெய்யவும் வைக்கும்!
மணிமேகலை அமுதசுரப்பி
பெற்ற கதையும் இப்படியான ஒன்றுதான்! இந்த மணிமேகலையில் அமுத சுரப்பியைப் பற்றிப்
புரிய முன்னர் பாரதீய விவசாய முறை பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருத்தல்
அவசியம்!
பண்டைய பாரதத்தின்
பெருஞ்செல்வம் பசுக்கள் - செல்வத்திற்கும் பசுவிற்கும் மாடு என்ற ஒரு சொல்தான்
பாவிக்கப்பட்டிருந்தது. பசுக்களை வளர்ப்பது வெறுமனே பாலுக்கும், தயிருக்கும்,
நெய்யுக்கும் அல்ல! அது விவசாயத்தின் தாய் என்பதே இரகசியம். பசுஞ்சாணம் ஒரு நல்ல
மண்வள நுண்ணுயிர் ஊக்கியாகும். தற்போதைய அறிவியல் மொழியில் சொல்வதானால் Bio
fertilizer. பசுஞ்சாணமும், கோமூத்திரமும் மண்ணில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளைப்
பெருகச் செய்யும் ஊடகம்! இப்படிப் பெருகும் நுண்ணியிரிகள் மண்ணில் உள்ள கனிமங்களை
பிளப்பதன் ஊடாக தாவரத்திற்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கிறது.
இதை சுபாஷ் பாலேக்கர்
அவர்கள் ஜீவாம்ருதம் என்றும், நம்மாழ்வார் ஐயா அமுதக்கரைசல் என்றும் அறிவியல்
ரீதியாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். இப்படி பசுஞ்சாணமும், கோமூத்திரமும்
பாவிக்கப்படும் நிலங்களின் விளைச்சல் அதீதமானவை! அள்ள அள்ளக் குறையாத அமுத சுரப்பி
போன்றவை. இதை நான் எனது சொந்த அனுபவத்தில் கத்தரிச்செய்கையில் கண்டிருக்கிறேன்.
ஆக பசுவினைப்
பயன்படுத்தி மண்ணை வளமாக்கிய நிலம் அமுத சுரப்பி போன்றது.
இதுதான் மணிமேகலை
அமுதசுரப்பி பெற்ற கதை;
மணிமேகலை பசிப்பிணி
போக்குவாள் என்பதும், அதுவே அவளுக்குரிய பணி என்பதும் அதற்குரிய தகுதியைப் பெற்றாள்
என்பதுமே பாத்திரம் பெற்ற கதையின் உண்மைப் பொருள்! பாத்திரம் என்பது தகுதி என்ற
அர்த்தத்தில் நாம் வாசிக்கவேண்டும்!
ஆபுத்திரன் கோமுகிக்
கரையில் பசுக்களின் துணையுடன் அள்ள அள்ளக் குறையாத விவசாய நிலத்தை வைத்திருந்தான்;
அதை எல்லாத்தகுதியுடனும் மணிமேகலை பெற்று பசிப்பிணி போக்கினாள் என்ற அர்த்தத்தைப்
பெறலாம்!
இந்த அடிப்படையில்
ஆராய்ந்து தமிழில் உயர்ந்த விவசாய அறிவியல் மணிமேகலை காப்பியத்தில் இருக்கிறது
என்பதை தமிழறிஞர்கள் நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன்!
இனி மணிமேகலை
காப்பியத்திற்கு வருவோம்; மணிமேகலை பாத்திரம் பெற்ற வரிகளை எளிய தமிழில்
எழுதியுள்ளேன். மூலம் இங்கே: https://www.tamilvu.org/library/l3200/html/l3200ind.htm
ஆபரணம் அணிந்த பெண்ணே இதைக்கேள்
அழகிய குவளை மலர்களும்,
நெய்தல் மலர்களும்
நிறைந்த பெரும்
புகழுடைய இப்பீடம் உள்ள
கோமுகி எனும் பெயருடைய
இந்த அழகிய பொய்கையின் அருகில்
இளவேனில் காலத்தில்
சூரியன் இடபராசியில் வரும் போது
இருப்பத்தியேழு
நட்சத்திரங்களில் பதின்மூன்று நட்சத்திரம்
தாண்டிய பின்னர் விசாக
நட்சத்திரம் வரும்
இந்த நாள் போதித்தலைவன்
புத்தபகவான் தோன்றிய நாளாகும்
ஆபுத்திரனது கையில்
இருக்கும் அமுதசுரபி என்ற பாத்திரம் பற்றிக் கூறுகிறேன் கேளாய் மடக்கொடியே
அந்த நாளில் (வைகாசி
விசாகத்தில்) நீ அங்கு வருவது போலவும்
பெண்ணே ஆபுத்திரனின்
அந்த பாத்திரம் உன் கையில் வருவதுபோலவும்
அங்கு உயிரிற்கு
மருந்து நிறைந்திருப்பதையும்
வாங்கும் உன்னை
வருத்தாமல் உனக்கு நல்ல தகைமையைத் தருவதையும் காண்கிறேன்!
இதன் முழுமையான
விபரத்தை அறவணனிடம் கேட்டுக்கொள்வாய்!
இப்படித் தீவதிலகை
கூறியவுடன் அந்தப் பீடத்தைத்
தொழுது வணங்கி
தீவதிலகையுடன் கோமுகிப் பொய்கையை சுற்றி வந்து அறக்கொள்கையில் நிற்க
சுற்றி வந்த அந்த இளம்
பெண்ணின் சிவந்த கையில்.......
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.