யோகம் என்பதன் எளிமையான பொருள்
"இணைதல்"
எது எதனுடன் இணைதல்?
யோகத்தின் இறுதி இலக்கைக் கருதினால்
"ஆன்மா இறைவனுடன் இணைதல்" என்று கொள்ளப்படும்.
ஆனால் அதற்கு முந்தைய நிலையில்
ஆன்மாவைச் சூழ இருக்கும் கருவிகளான உடல், மனம் ஆகியவற்றில் பிளவுபட்டிருக்கும்
தத்துவங்களை இணைத்தல். ஆன்மாவைச் சூழ இருக்கும் தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று
கூறுவார்கள். மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கு,
பஞ்சபூதம், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்சஞானேந்திரியம், பஞ்சகர்மேந்திரியம் ஆகிய
(4+5+5+5+5) 24 ம் ஆன்ம தத்துவங்கள்.
இப்படி 24 தத்துவங்களும்
இணைக்கப்பட்டிருக்கும்போது சித்தத்தில் எழும் விருத்திகள் இந்த இணைப்பை ஆட்டம்
காணவைப்பதால் இந்த சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதே யோகம் என்பார் பதஞ்சலி
மகரிஷி.
சாதனை என்பது இந்த கருவிகளுக்கு
இடையிலுள்ள இணைப்பினை சலனிக்கச்செய்யும். சித்த விருத்திகளை ஒழுங்குபடுத்தி
ஆன்மாவினை அறிய செலுத்தும் ஒழுங்குமுறை என்று அர்த்தம்.
சாதனை என்ற சொல்லின் வேர்ச்சொல்
சாத்யமாக்குதல். யோக சாதனை என்றால் சித்தவிருத்திகளை நிறுத்தி ஆன்மாவை நோக்கி ஆன்ம
தத்துவங்களை ஒழுங்குபடுத்துவதைக் குறிப்பிடுவர்.
ஹட யோகம் என்றால் இடகலை, பிங்கலையினை
சமப்படுத்தி இணைத்தல் என்று அர்த்தம்,
சிவ யோகம் என்றால் முப்பத்தாறு
தத்துவங்களும் பேதித்து ஆன்மா சிவத்துடன் இணைதல் என்று அர்த்தம்.
ஒருவன் தனது உலகவாழ்க்கையில் இன்பமாக
வாழ வேண்டும் என்றால் தனது 24 தத்துவக்கருவிகளையும் ஆற்றலுடையதாக வைத்திருக்க
வேண்டும்.
இதற்குரிய எளிய முறைதான் 24 அட்சரங்கள் கொண்ட காயத்ரி மந்திர
சாதனை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.