Plane of Existence:
சத்
Plane of
Consciousness: சித்
Plane of Delight:
ஆனந்த
Plane of Super Mind:
விஞ்ஞான
Plane of Pure Mind:
மனம்
Plane of Pure Life:
பிராணன்
Plane of Pure Matter:
அன்ன உடல்
ஸ்ரீ அரவிந்தர் சத் எனும்
உயர்ந்த உணர்வுத் தளத்திலிருந்து இறையுணர்வு கீழிறங்கி அன்ன உடலை அடைவதன் மூலம்
மனிதன் உருவாகிறான் என்பதை அறிவிக்கிறார்.
இது காயத்ரி சாதனையின்
சப்த வ்யாக்ருதிகளினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சத் - சத்யம்
சித் - தப
ஆனந்தம் - ஜன
விஞ் ஞான - மஹ
மனம் - ஸ்வஹ
பிராணன் - புவ
அன்ன உடல் - பூர்
சாதகன் முதலில் ௐம்
என்ற பரப்பிரம்ம சக்தியை பூர், புவஹ, ஸ்வஹ என்ற அன்ன உடல், பிராண உடல், மன
உடலிற்கு புத்தியைத் தூண்டும் பேரொளி மூலம் கொண்டுவந்து நிரப்பி மஹ எனும்
விஞ்ஞானமய கோசத்தினைப் பெறுவதே மூன்று வ்யாக்ருதிகள் சேர்ந்த திரிபதா காயத்ரி
சாதனையினுடைய நோக்கம்.
இதே செயலை பதஞ்சலி
மகரிஷி ப்ரக்ருதி வரையிலான 24 ஆன்ம தத்துவங்களில் ஸமாதி பழகுவதால் யோகி ருதம்பரா
ப்ரக்ஞை என்ற தெய்வீக அறிவைப் பெறுகிறான் என்கிறார்.
திரிபதா காயத்ரி
மந்திரம் 24 அட்சரங்களால் இந்த 24 தத்துவங்களையும் பேதித்து ருதம்பரா ப்ரக்ஞையைத்
தருகிறது.
அன்ன உடல், பிராண உடல்,
மன உடல் மூன்றையும் தாழ் நிலை முக்கோணம் எனவும் சத், சித், ஆனந்தம் ஆகிய
மூன்றையும் உயர் முக்கோணம் என்றும் குறிப்பிடலாம். இந்த இரண்டையும் இணைக்கும் உயர்
ஞானம் மஹ எனும் விஞ்ஞானமய கோசம். இதுவே ஷட்கோணத்தின் விளக்கமும் ஆகும்.
காயத்ரி சாதனையின்
முதல் நோக்கம் உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றையும் அந்தப் பேரொளியால் நிறைத்து
விஞ்ஞானமய கோசம் பெறுதலாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.