நெப்போலியன் ஹில் தான்
Sex Transmutation - காமத்தின் உருமாற்றம் பற்றிச் சொன்னாரா என்றால் இல்லை என்பதே
பதில். பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத ரிஷி மரபு இதைத்தான் கற்கவேண்டிய வித்தை என்று
கற்பித்து வருகிறது.
சரஸ்வதி உபாசனையின்
ஸித்தி எமக்கு ஆறு படிகளில் கிடைக்கும்.
காமத்தினால் உருவாகும்
படைப்பாற்றலிலிருந்து பிரவாகிக்கும் ஆற்றலை சரியாக உருமாற்றினால்;
1. முதல் படியில்
தடையற்ற எண்ண ஓட்டத்தை உருவாக்கி சிந்திக்கச் செய்வது,
2. இரண்டாவது படியில்
சிந்தித்த எண்ணத்தை சரியாக வாக்கினால் சொல்லக்கூடிய ஆற்றல்.
3. மூன்றாவது நிலையில்
எழுத்தினால் எழுதக் கூடிய ஆற்றல்.
4. நான்காவது நிலையில்
கவித்துவம், நாட்டியம், இசை என்று நுண்கலைகளூடாக எமது படைப்பாற்றலை
வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெறுதல்.
5. ஐந்தாவது நிலையில்
யோகத்தின் மூலம் பிரபஞ்சத்தின் நுண் அறிவான மேதா சக்தியைப் பெறுதல்.
6. பிரம்மத்தை
ஆச்சரித்து பிரம்மம் என்ற இறையுடன் ஒன்றுதல் (பூரண குண்டலினி விழிப்பு)
இதை எப்படி சாதிப்பது
என்பதற்கான அடிப்படையைத்தான் கீழ்வரும் மந்திர சங்கல்பத்தின் மூலம் பெறுகிறோம்.
ஓம் சரஸ்வதி
நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா
இது வித்தியாரம்பத்தின்
போது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் மந்திரம்; இதன் பொருள் காம ரூபிணி -
காமத்தின் வடிவாக இருப்பவளே எனது எண்ணமும் வாக்கும் நதிபோல (சரஸ்) ஓடச் செய்பவளே
நான் உன்னை வணங்குகிறேன்; எனது வித்தையை கற்கும் இந்த ஆரம்ப முயற்சி பலனளிக்கச்
செய்வாயாக என்று வணங்குகிறோம்.
இந்த மந்திரத்தின் அடிப்படை
நோக்கம் ஒவ்வொரு சிறு குழந்தையும் தனது படைப்பாற்றலை - காம சக்தியை உருமாற்றி தான்
கற்கும் கல்வியில் - வித்தையில் சிறந்த எண்ண ஓட்டத்தையும், வாக்கினூடாக மொழியினைச்
செம்மையாக உபயோகிக்கும் ஆற்றலையும் பெற்றுச் சிறக்க வேண்டும் என்பதே.
அதாவது ஒரு குழந்தை தனது
படைப்பாற்றல் காமமாக வெளிப்படும் போது சரஸ்வதியைக் காமரூபிணியாக உணர்ந்து, உடலில்
தாழ்ந்த காமமாக வெளிப்பட்டுவிடாமல் தான் பயிலும் வித்தைக்கு அந்த ஆற்றல்
மடைமாற்றப்பட்டு, உயர்ந்த அறிவாக உருமாற்றப்பட்டு நதிபோல மனதிலும், வாக்கிலும்
பிரவாகிக்கச் செய்யும்படி தன்னைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை இந்த
மந்திரம் சித்தமாகிய ஆழ்மனதில் ஏற்படுத்துகிறது.
எந்த வித்தையை கற்கும்
பொழுதும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஒவ்வொரு மாணவனும் தனது காமசக்தி உயர்ந்த
அறிவாற்றலின் பக்கம் செலுத்தப்பட்டு மனம், அறிவாற்றல் பெற்றவர்களாக
உருமாறுவதற்குரிய சங்கல்பத்தைப் பெறுவதே சரஸ்வதி உபாசனையின் நோக்கம்!
சரஸ்வதியின் ஆற்றல்
அல்லது செயல் - அதாவது தனது காமத்தை மனோ அறிவு சக்திகளாக உருமாற்றும் திறன்
இல்லாவிட்டால் மனிதன் தனது மூலாதார நிலையான ஆகாரம், மைதுனம், பயம், தூக்கம்
ஆகியவற்றிற்கு மாத்திரம் தனது ஆற்றலைச் செலவிட்டு மனதை, அறிவை வளர்க்காமல்
விலங்காக இருந்திருப்பான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.