ஹடயோகம் இடகலை, பிங்கலை
நாடிகளை சமப்படுத்தி குண்டலினியை விழிப்பிக்கும் யோக சாதனை முறை.
ஹடயோகத்தில் குண்டலினி
விழிப்பிற்கு மிக உயர்ந்த சாதனையாக மூன்று பயிற்சிகள் கூறப்படுகிறது; இது
மூன்றையும் மஹா குஹ்யம் என்று ஸ்வாத்மாராம யோகீந்திரர் கூறுகிறார். அதாவது
மிகப்பெரிய இரகசியம் என்று அர்த்தம்.
முதலாவது மகா முத்திரை
- இது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியினை சுருண்டு படுத்திருக்கும் நாகத்தின்
வாலில் தடிகொண்டு தட்டி எழுப்பும் பயிற்சி. இதனால் சாதகன் குண்டலினி விழிப்புப்
பெறுவான்.
இதற்கு அடுத்து
பயிற்சிக்க வேண்டியது; மகா பந்தம்; விழிப்படைந்த குண்டலினி சக்தியை எப்படி
நாடிகளில் கட்டுவது - (பந்தம் என்றால் கட்டுதல் என்று அர்த்தம்) என்ற முறை.
மூன்றாவது மகாவேதா -
வேதை என்றால் பிளப்பது என்று அர்த்தம். குண்டலினியால் சக்கரங்களை வேதிப்பது என்று
அர்த்தம். இந்த மகா வேதா இல்லாமல் முதல் இரண்டும் பயன் தராது.
குண்டலினி சஹாஸ்ராரம்
வரை சென்று, கீழிறங்காமல் நின்று, சக்கரங்களை பேதித்து இடகலை, பிங்கலை சமப்பட்டு
ஹட யோகம் சாதிக்க இந்த மூன்றும் ஒன்றாக பயிற்சிக்கப்பட வேண்டும்.
ஆசனம் செய்யக்கூடிய
எவரும் இந்த மூன்றையும் இலகுவாகச் செய்துவிடலாம் என்று எவரும் நினைத்தால்
அதற்குத்தான் இந்த மூன்றையும் சேர்த்து மஹாகுஹ்யம் என்று சொல்கிறார். பார்ப்பதற்கு
உடற்பயிற்சி போல் இலகுவாகத் தெரிந்தாலும் இவற்றைச் செய்யும் போது செய்ய வேண்டிய
நாடி தாரணைகள், உப முத்திரைகள் எல்லாம் மறைப்பாக குருவிடம் இருக்கிறது.
இயம, நியாதிகள்,
மிதாகாரம், ஆசனப் பயிற்சி, ஷட்கர்மம், பிரணாயாமம் இவற்றில் முறையாக தனது உடல்,
மனம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி குண்டலினி விழிப்பிற்கு தகுதியானவனுக்கு குரு
பிரத்தியேகமாக உபதேசிக்கப்படுவதால் மகா குஹ்யம் என்று கூறப்படுகிறது.
இவற்றை உடலால் ஆசனம்
செய்யக்கூடிய எவரும் செய்ய முடிந்தாலும் குண்டலினியை விழிப்பிக்க குருமுகமாய்
பயிலுதலின் அவசியத்தை ஸ்வாத்மாராம யோகீந்திரர் ஹடயோக பிரதீபிகையின் மூன்றாவது
உபதேசத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.