புல்லாங்குழலின் துளைகளில் காற்றைச்
செலுத்தி இனிய ஓசையைப் பெறமுடியும், பின்னர் அதன் துளைகளை ஒரு ஒழுங்கமைப்பில் மூடி
ஸ்வரங்களைப் பெறமுடியும், ஸ்வரங்களுக்கு காற்றின் அழுத்தத்தினை கூட்டிக்
குறைப்பதன் மூலம், மாற்றியமைப்பதன் மூலம் பல வித இனிய இராகத்தினைப் பெறமுடியும்.
மனம்
புல்லாங்குழல் என்றால் எண்ணங்கள் குழலினூடாக வெளிப்படும் காற்று; மனதினூடாக
எண்ணங்கள் வெளிப்படுத்தப்படுகிறது; இந்த எண்ணங்கள் ஸ்வரங்கள் போல் அழகாக வெளிப்பட
வேண்டும் என்றால் அதற்கு அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
எண்ணங்களே தனிமனிதனை செதுக்குகிறது
எண்ணங்களே குடும்பங்களை உயர்த்துகிறது
எண்ணங்களே சமூகத்தை உயர்த்துகிறது
எண்ணங்களே தேசத்தை உயர்த்துக்கிறது!
எண்ணங்களே தன்மனிதனை அழிக்கிறது
எண்ணங்களே குடும்பங்களை அழிக்கிறது
எண்ணங்களே சமூகத்தை அழிக்கிறது
எண்ணங்களே தேசத்தை அழிக்கிறது
இன்று நாம் அழிவது நேற்று விதைத்த
எண்ணத்தால்!
தேசம் ஆற்றலுடன் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் ஒவ்வொரு
தனிமனிதனது எண்ணமும் சரியாக சீரமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.