அடிப்படையில்
இலங்கையர்களும், இலங்கையில் உள்ள இந்தக் கல்விமுறை உருவாக்கும் கல்வியாளர்களும்
சோம்பேறிகள்! இதை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன்.
ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப
நிறுவனம் இலங்கையர்களால் high end IT product இனை உருவாக்கத் தகுந்த திறன் வளம்
இல்லை என்று இந்தியாவிற்கு தனது திட்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதனால்
வரும் வருமான இழப்பு பல மில்லியன் டொலர்கள்! அத்தகைய கம்பனி 04 இனுடைய வருமானம்
இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரு வருடத்தில் அடைக்கும். இந்த வருமானத்தை
ஈர்க்கத்தக்க வகையில் மனித வளத்தினை உருவாக்க நாம் நீண்டகால மூலோபாய திட்டங்கள்
ஏதும் வைத்திருக்கிறோமா என்றால் இல்லை!
இங்குள்ள புத்திஜீவிகள்
கற்பிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கு விரும்புவதில்லை! இங்குள்ள ஒரு PhD
holder தனது துறையில் லட்சம் டொலர் வர்த்தகத்தை உருவாக்க முடிந்தால் இலங்கை
எவ்வளவோ பெரிய பணக்கார நாடாக இருக்கும்!
இங்கிருக்கும் புத்திஜீவிகள் படிக்காத முட்டாள் அரசியல்வாதிகள்தான் தமக்கு படியளக்கும் தெய்வம் என்று சிந்தனையில் இருக்கும் வரை இப்படி உசுப்பேற்றுபவர்களை தலைவர்களாக்கி, பின்னர் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபோது கொதித்தெழுந்து உணர்ச்சியைக் கொட்டிவிட்டு வீட்டில் போய் சுருண்டு படுப்பதை மாத்திரம் தான் செய்யமுடியும்!
இதுவரை என்னிடம் தொழில் புரிந்தவர்களும் சரி, இப்போது நான் வழிகாட்டும் பட்டதாரி மாணவர்களும் சரி எல்லோருக்கும் சொகுசாக அரசாங்க வேலையில் போய் குப்பை கொட்ட வேண்டும்! தனியாக தமது திறனைப் பாவித்து ஒரு சிறிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை அறவே இல்லை! உலகம் எப்படி இயங்குகிறது! பொருளாதாரம் எப்படி இயங்குகிறது, அதில் தனது பங்கு எங்கிருக்கிறது என்ற துளி சிந்தனைகூட இல்லை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.