இலங்கை மக்கள் தமக்கான
உணவினை உற்பத்தி செய்வதை மறந்து எங்கிருந்தோ இறக்குமதி செய்து பீட்ஸாவும், ஓட்ஸ்
கஞ்சியும், பர்கரும், கோதுமை மாவும் சாப்பிடும் சோம்பேறிகளாக இருந்தால் நிச்சயம்
பஞ்சம் வரும்! இவற்றையெல்லாம் வாங்குவதற்கு எம்மிடம் டாலர் இல்லை!
உடல் ஆரோக்கியமாக
வாழ்வதைத் தாண்டி ருசிமாத்திரம் தான் உணவு என்று சுவைக்கு அடிமையாகியிருந்தால்
நிச்சயமாக கஷ்டப்படத்தான் போகிறார்கள்.
எம்மிடம் வளமான மண்
இருக்கிறது! நீர் இருக்கிறது! எந்த உரமும் போடாமல் வளரும் உணவுப் பயிர்களும்
இருக்கிறது!
இவற்றை எப்படிப்
பயன்படுத்துவது என்ற அறிவு இல்லை! இது மட்டும் தான் உணவு என்ற மயக்கம் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலே உணவு உற்பத்தியில் எம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு
இருக்கிறது என்ற பொறுப்பு உணர்ச்சி இல்லை! இவை எல்லாம் இல்லாதவை!
இருப்பதோ பதட்டமும்
பயமும் மாத்திரம்!
ஒவ்வொரு வீட்டிலும், நிலம்
இருப்பவர்கள், இருக்கும் இடம் எல்லாம் மரவள்ளி, வத்தாளைக் கிழங்கு,
இராசவள்ளிக்கிழங்கு, முருங்கை, பலா, வாழை, ஈரப்பலா, கொவ்வை, கீரை என்று
வளர்க்கத்தெரியுமாக இருந்தால்,
உரத்தை நம்பாமல்
விளையும் அரிசி ரகங்களை கைவசம் வைத்திருந்தால், கௌப்பி, உழுந்து, குரக்கன் உணவுகள்
உண்ணும் பழக்கம் இருந்தால்!
தென்னை ஒவ்வொரு
வீட்டிலும் இருந்தால்!
உணவுக்கு எங்கே பஞ்சம்
வரப்போகிறது!
இளைஞர்களே, கணனியும்
தொழிலும் பணம் தரும்! உற்பத்தி இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் உணவு
வராது.
பணம் உங்களிடம் அதிகமாக
இருந்தால் கிராமப்புறங்களில் வாழும் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தத்தெடுங்கள்!
விவசாயம் செய்யத்தெரிந்தவர்களை ஆதரியுங்கள்!
முதலீடு செய்கிறேன்
என்று செருக்குடன் போய் குழம்பாதீர்கள்! உற்பத்தி செய்பவர் வாழ்க்கைக்குத்
தேவையானதை தகுந்த பணம் கொடுத்து அவரது விவசாயம் விழுந்துவிடாமல் பாதுகாக்கும்
பொறுப்புணர்ச்சியினை உருவாக்குங்கள்.
உற்பத்தியைப்
பெருக்குங்கள்! உணவைத் தருவது இயற்கையும் இயற்கையுடன் பாடுபடும் விவசாயியும்!
சுப்பர் மார்கட்டோ, கடை
முதலாளியோ இல்லை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.