விவசாய தொழில்நுட்ப
ஆராய்ச்சிகள்.
ஆய்வுகள் யாருக்காக
செய்யப்படுகிறது என்பது பற்றிய தெளிவான மையம் - centric இருக்க வேண்டும். நாம்
தொழில்நுட்ப ஆய்வுகளின் தேவைகளை இப்படி வகைப்படுத்தலாம்.
1) பல்கலைக்கழகத்தில்
ஆய்வாளர்கள் தமது பட்டம், பதவி உயர்விற்காக செய்யப்படும் ஆய்வுகள். paper
போடுவதற்கு!
2) தனியார் நிறுவனங்கள்
தமது பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, இலாபத்தைப் பெருக்குவதற்காக தமது
செலவில் தாமே தனியாகச் செய்யும் ஆய்வுகள்.
3) தனியார் நிறுவனம்
தம்மிடம் அறிவுப்புலம் இல்லாதபோது பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து தமது
பொருட்களை மேம்படுத்தி அதிக இலாபம் பெற உருவாக்கும் ஆய்வுகள்.
4) சமூகத்தின் அடிமட்ட
நிதி வசதிகுறைந்த விளிம்பு நிலை உற்பத்தியாளர்களுக்கு அவர்களது உற்பத்தியின்
தரத்தை, குறைந்த செலவில், வினைத்திறனாக பெற தேவையான ஆய்வுகள்.
பேப்பர் போடுவதற்காக
மாத்திரம் செய்யப்படும் ஆய்வுகள் மிகச்சுயநலமானவை; குறித்த நபர்களுக்கு மாத்திரம்
பயன்படும் ஏட்டுச் சுரக்காய்கள்!
தனியார் ஆய்வு, தனியார்
+ பல்கலைக்கழக கூட்டு ஆய்வுகள் பொருளாதார நோக்கத்தில் சற்று வினைத்திறன் ஆனவை;
ஆனால் மீண்டும் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் பயனுள்ளதாக இருப்பது.
உண்மையில் தேவையான
ஆய்வு விளிம்பு நிலையில் இருக்கும் விவசாயிகள், மீனவர்கள், பண்ணை வளர்ப்பு
கீழ்மட்ட உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சந்தையில் தரத்துடன் கொண்டு செல்லத்
தேவையான அறிவினை, தரவுகளை உருவாக்கி உற்பத்தியாளர்களை இலாபமடையவைக்கும்
வியாபார/ஆய்வு மாதிரியுருக்கள். எமது பல்கலைக்கழகங்கள் இத்தகையை சமூகத்தேவை
ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தின் பொருளாதாரத்தை உருமாற்றம் செய்யும்
ஊக்கிகளாக (transformational catalyst) மாற வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.