எனது தந்தையும், குருவும் ஒரே
மனப்பாங்குடையவர்கள் என்பது நான் பெற்ற வரம்! தன்னை விட தன் மகன் எல்லாவற்றிலும்
உயர்வானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனது தந்தை எப்போதும்
சொல்லிக்கொண்டிருப்பது!
அதுவே எனது குருவின் அபிப்பிராயமும்!
அவர்களது வழி வந்த எமது அபிப்பிராயமும் பண்பும் கூட!
அவர்கள் வழி எனது பிள்ளைகளும்,
மாணவர்களும் என்னை விட உயரம் தொட உரமாக நான் இருக்க வேண்டும் என்பது எனது
சங்கல்பமும் கூட.
இதுவே மனிதகுலம் மென்மேலும் சிறக்க
ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மனப்பண்பும் கூட..
************************
“மாணவன் தன்னை விட தாழ்ந்த நிலையில்
இருக்க வேண்டும் என்று குரு ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது என்பது எனது
அபிப்பிராயம்.
மாணவன் தன்னை விட முன்னேற வேண்டும்
என்று குரு எப்போதும் விரும்ப வேண்டும். அப்போதுதான் அறிவு விரிவடையும். என்
மாணவன் எனக்கு தெரிந்ததை விட குறைவாக தெரிந்திருக்க வேண்டும், அவருடைய மாணவன் அவர்
அறிந்ததை விட குறைவாக அறிந்திருக்க வேண்டும் என்று நான் சொன்னால், அது
பூஜ்ஜியத்திற்கு செல்கிறது. எனவே, நான் அறிந்ததை விட என் மாணவன் அதிகம் தெரிந்து
கொள்ள வேண்டும் என்று சொன்னால், அது மலரும். உங்கள் மகன் உங்களை தோற்கடிக்கும்படி
நீங்கள் அவனைத் தயாராக்க வேண்டும் என்று ஒரு சமஸ்கிருத பழமொழி உள்ளது. டார்சனின்
மகன் டார்சனை விட சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும்.
- ஸ்ரீ அம்ருதானந்தநாத சரஸ்வதி
(Dr. N. Prahaladha Sastry - Nuclear Scientist)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.