பொருளியல் என்பது
ஒவ்வொரு தனிநபரும், அரசாங்கமும், நிறுவனமும் தமது முடிவுகளுக்கான அடிப்படையை
ஆராய்வதற்கான ஆய்வு முறையாகும்.
ஒருவன் பீட்ஸா இன்று
சாப்பிடலாமா என்ற கேள்வி மனதில் எழும்போது சாப்பிடலாம் என்று உறுதிப்படுத்துவதும்,
மாதக் கடைசியில் சம்பளம் வந்தபிறகு சாப்பிடலாம் என்று அந்த முடிவைத் தள்ளிப்
போடுவதும் அவனது பொருளாதாரம் முடிவு செய்கிறது.
தனது பொருளாதாரத்தை
ஆராய்ந்து முடிவுகளை எடுத்த பின்னர் அந்த முடிவு அவனது மற்றைய தேர்வுகளை
மட்டுப்படுத்துகிறது. உதாரணமாக பீட்ஸா ஆசையினால் உந்தப்பட்டு வாங்கி உண்டால் தனது
கல்விக்குத் தேவையான புத்தகம் வாங்க பணம் இல்லாமல் போகலாம்.
ஆகவே ஒருவன் தனது
தேர்வுகளை செய்வதற்கு தன்னிடமிருக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையை நன்கு
கணிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.
இன்று விவசாயம்
வீழ்ச்சியடைவதற்கு காரணம் பொருளியல் தெரியாத விவசாய ஆலோசகர்கள் விவசாயத்தை
மேம்படுத்துகிறேன் என்று தனியே பயிர்களையும், பயிர்களை வளர்க்கும் முறைகளையும்
தெரிந்துகொண்டு தம்மை விவசாய ஆலோசகர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் விவசாய
வழிகாட்டிகளால் ஆகும்.
ஒருவன் விவசாயம்
செய்யப்போகிறேன் என்று முடிவு எடுத்து தனது சேமிப்பினை முதலிடுகிறான் என்றால் அவன்
முதலீடு கூட இல்லாமல் போகக்கூடிய, எதிர் நோக்கப்போகும் அபாயங்கள் இவை
1) பீடைத்தாக்கம்
2) காலநிலை
மாற்றத்தினால் அதீத மழைவீழ்ச்சி அல்லது வரட்சி
3) உரத்திற்கான
செலவுகள் அதிகரிப்பு
4) பீடைகொல்லிகளுக்கான
செலவு அதிகரிப்பு
இவை எல்லாம் தாண்டி
உற்பத்தியை உருவாக்கினால் தனக்கு ஏற்பட்ட செலவுகளையே பெற முடியாத படி ஒருவர் வந்து
அடிவிலைக்கு வாங்கிச் சென்று கொழுத்த விலைக்கு இலாபத்தைத் தேடும் இடைத்தரகர்.
நேரடியாக விற்கலாம்
என்றால் பல இலட்சம் ரூபாய் காரில் வந்து இறங்கி, பீட்ஸாவும், பர்கரும் பேரம்
பேசாமல் வாயைப் பொத்தி உண்ணும் பெருந்தகைகள் ரோட்டில் தனது அன்றாட உணவிற்கு
விற்பனை செய்யும் ஏழை விவசாயி ஏதோ தங்களை ஏமாற்றி மாடி வீடு கட்டிவிடுவதை
ஜாக்கரதையாக தவிர்த்த பெருமையுடன் பேரம் பேசி விலை குறைத்து வாங்கிவரும்
பற்றாக்குறை மனமுடைய ஜென்மங்கள்!
விவசாயப் பொருளாதாரம்
சரியாக வேண்டும் என்றால் விவசாய உற்பத்திக்குள் அனாவசியமாக திணிக்கப்படும்
உள்ளீட்டுச் செலவுகள் நீக்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் விவசாயியினை சுரண்டுவது
தவிர்க்கப்பட வேண்டும்; வாங்கும் மக்கள் தம்முடைய பகட்டுச் செலவிற்கு கணக்குப்
பார்க்காமல் மயங்கி செலவழிப்பவர்கள் தகுந்த விலையைக் கொடுத்து விவசாயியை
ஊக்கப்படுத்த வேண்டும்.
இப்படிப் பொருளாதார
சிந்தனை செய்யாமல் விவசாய ஆலோசனை செய்கிறோம் என்று படித்ததை வாந்தி எடுக்கும் விவசாய
போதனாசிரியர்களை வைத்துக்கொண்டு உருப்படியாக விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம்
என்பதும், இது ஒரு விவசாய நாடு என்பதும் ஒரு கற்பனா வாதமே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.