தற்போது பெரும்பாலான
இலங்கையர்கள் பேரழிவுச் சிந்தனை (Catastrophic thinking) பாதிப்பிற்கு
தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்வின் போன்ற செய்தித்தளங்கள்,
இந்திய ஊடகங்கள் பேரழிவுச் சிந்தனைக்கான பதட்டத்தை உருவாக்குவதையே செய்திகளாக
வரையறுக்கிறது.
இது நீண்ட கவலையால்,
பதட்டத்தால் (anxiety) உருவாகும் மனநிலை! பதட்டம் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற
எண்ணங்கள் இயல்பாக உருவாகும். உங்கள் பதட்டம் ஈர்க்கக்கூடிய கற்பனையை சந்திக்கும்
போது, பேரழிவு சிந்தனை உருப்பெறும்.
உதாரணமாக எனது சம்பளம்
ஒரு இலட்சம் ரூபாய், எரிபொருள் செலவு மாத்திரமே முப்பதாயிரம் வரப்போகிறது
என்றவுடன் வரும் பதட்டம் கற்பனைக் குதிரையை தட்டிவிடும். உடனே இலங்கை
அழியப்போகிறது! கோத்தபாய வீட்டிற்கு போ என்றெல்லாம் குதித்து எமது பதட்டத்தைத்
தீர்த்துக்கொள்ள முயல்வோம்!
இப்படிப் பதட்டம் ஓரளவு
தீர்ந்தவுடன் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு எமது அனாவசியச் செலவுகளை குறைப்பது
எப்படி என்று ஆராயத்தொடங்குவோம். அனேகர் போராட்டங்களில் கலந்து கொள்வது தமது
பதட்டத்தை வழிந்தோடச் செய்வதற்காகவே!
தற்போதைய ஆட்சியாளர்கள்
69 சதவீத மக்களுக்கு பேரழிவுச் சிந்தனையை விதைத்து ஒருவித பதட்டத்தை உருவாக்கி,
அந்தப் பதட்டத்தை தாம் மட்டும்தான் தீர்க்க முடியும் என்று ஆழ்மனதில் பதிப்பித்த
நம்பிக்கையாலேயே ஆட்சிக்கு வந்தனர்!
இந்த பேரழிவுச் சிந்தனை
அரசியலில், அனேகமாக இந்திய, இலங்கை தேர்தல்களில் பயன்படுத்தப்படும் ஒரு உளவியல்
உத்தி! பொதுவான தேர்தல்கள் நாட்டிற்கும், மக்களிற்கும் ஒரு பேரழிவு ஏற்படப்
போவதாகவும், அதைக் காக்கும் ஆப்தாண்டவர்கள் தாம் என்பதும் போலவே கட்டமைக்கப்படும்!
இந்த உத்தியைப்
பயன்படுத்திய இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களது அறிவீனம் பதட்டத்தை எல்லை மீறச்
செய்து அசாதாரணப் பதட்டத்தை உருவாக்கி பாரிய பேரழிவுச் சிந்தனையை எல்லோரது
மனதிலும் உருவாக்குகிறது. இதை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தூபம் போடுகிறது.
மக்களின் பதட்டம்
கட்டுப்படுத்தப்படாவிட்டால் பேரழிவுச் சிந்தனை பேரழிவு நடத்தைக்கு (Catastrophic
behavior) செல்லும். இதுவே வன்முறையாக மாறுகிறது.
எமது பதட்டங்களை
கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்து என்ன செய்யப்போவது என்பதை நிதானமாக
திட்டமிடுவதும், ஆக்கபூர்வமாக மனதைப் பயன்படுத்துவதும் மன, உடல், சமூக
ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.