ஒரு தொகுதி இருப்பதை
விட ஒரு உன்னத நிலைக்குச் செல்வதற்கான ஒன்றுபட்ட சமூக அழுத்தம். ஏற்கனவே இருக்கும்
அரசியல், பொருளாதாரம், சமூக, கலாச்சாரக் கூறுகளினால் அதிருப்தியுற்ற சமூகம் அதைவிட
மேன்மையான ஒரு கட்டமைப்பை உடனடியாகப் பெற செய்யபடும் அதிரடி நிகழ்வாக புரட்சி
வரையறுக்கப்படுகிறது.
இது அரசியல் தலைமையை,
அதிகாரத்தை நோக்கிச் செய்யப்பட்டாலும் பொருளாதார, சமூக, கலாச்சார பெறுமானங்கள் மிக
முக்கியமான பங்கினை வகுக்கிறது.
புரட்சிகளுடைய
கோட்பாட்டுகளை புராதன ஐரோப்பிய தத்துவவியளார்கள் இப்படி வரையறுக்கிறார்கள்;
பிளாட்டோ கூறுகிறார்
ஒரு சமூகம் தனது பெறுமானம் சார்ந்த நம்பிக்கைகளை சரியாக பின்பற்றுமாக இருந்தால்
புரட்சியைத் தடுக்கலாம் என்று!
அரிஸ்டாட்டில் ஒரு
கலாச்சாரத்தில், சமூகத்தில் அடிப்படை value system பலவீனமாக இருந்தால் அந்தச்
சமூகம் புரட்சிக்குள் செல்லும் என வரையறுத்தார்.
ஹெகல் கட்சிகள்
சீர்திருத்தங்களை தூண்டுவதற்கும் செயல்படுத்துவதற்கும் அவசியமான ஊக்கிகளாகக்
கருதினார். இந்த அடிப்படையில் மார்க்ஸ் சமூக வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்களை சமூகத்திலுள்ள
பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்குரிய் அதிகாரப் போராட்டமாக பார்த்தார்.
அதிகாரத்தைப் பற்றிய
பழைய சித்தாந்தர்கள் ethics and moral சார்ந்தவை!
ஆனால் Machiavelli
சித்தாந்த அதிகாரத்தில் ethics and moral இவற்றிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை!
அதிகாரத்தை தக்கவைத்து உறுதியான அரசைப் பேணுவது மாத்திரமே Machiavelli அரசியல்
சித்தாந்தம்!
higher ethical
foundation இல்லாத Machiavelli சித்தாந்த அதிகாரத்தை நோக்கி செய்யப்படும்
புரட்சிகளின் விளைவுகள் கணிக்கப்பட முடியாதவை!
ஔவைப் பாட்டி புரட்சி
ஏற்படாமல் இருக்க வழி சொல்லியிருக்கிறார்!
வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன்
உயர்வான்
இந்தப்பாட்டு அந்தக்காலத்து
விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் அடிமட்டம் பொருளாதாரத்தை
உருவாக்க உட்கட்டமைப்பு (வரப்புயர நீருயரும்) சரியானால் உற்பத்தி பெருகும் (நெல்
உயரும்), உற்பத்தி பெருகினால் ஒவ்வொரு குடிமகனும் வளமாகுவான்; இதனால் அரசு
நடாத்தத் தேவையான வரி கிடைத்து அரசன் சிறப்படைவான் என்பது பெறப்படும்!
இலங்கை அரசங்கம் எங்கு
பிழைவிட்டது என்பதை இந்தப்பாடலை வைத்துக்கொண்டு விளங்கலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.