சுதேச உணவுப்பழக்கத்தை
ஊக்குவிப்போம்
********************************************
இந்தத் தொடரின் நோக்கம்
நாடு உணவில் தற்சார்பு - தன்னிறைவு உடையதாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யாமல் தன்னால் உற்பத்தி செய்யப்படுவதை, உண்ணும் பழக்கத்தை மக்கள்
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை சோறும் கறியும்
உண்ணும் மக்களைக் கொண்டது என்று வாய்ப்பேச்சில் சொன்னாலும் கணிசமான மக்கள்
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் வெள்ளைக்காரன் உணவுப் பஞ்சத்திற்கு கொண்டு வந்த
கோதுமைக்கு அடிமையாகியவர்கள். இப்படி பஞ்சத்திற்கு பசி தீர்க்க வந்த கோதுமை
படிப்படியாக அடிமையாக்கி இலங்கையின் பொருளாதாரத்தை உறிஞ்சும் அரக்கனாகி
நிற்கிறான்.
எமது அரிசிக்
கஞ்சியும், ஒடியல் கூழினையும் தாழ்வான உணவாக கருதிக்கொண்டு பனிஸும், பர்கரும்
உயர்ந்த உணவு என்று எண்ணும் மடையர்கள் நாம்!
மானிய உரத்தில் விளைந்த
அரிசியும் இனி விலை அதிகரித்து செல்வம் உள்ளவர்கள் உண்ணும் உணவாக மாறப்போகிறது.
ஆகவே உள்ளூரில் எந்த உள்ளீடும் இல்லாமல் கிடைக்கும் உணவுப் பொருட்களை எப்படி
உணவாக்கலாம் என்ற அறிவு அவசியம்.
அந்த வகையில் இந்த வார
அறிமுகம் இராச வள்ளிக் கிழங்கு.
எங்கும் வளரக்கூடியது.
உரம், பீடைகொல்லிகள் எதுவும் பாவிக்கத்தேவையில்லை.
இது உழுத்தம் மாவுடன்
சீனி, உப்புச் சேர்த்து களியாக, கூழாக மிகச்சிறந்த காலை உணவு. பச்சையாக உண்டால்
சுணைக்கும் என்று ஊர்வழக்கில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படை இதில் இருக்கும்
Saponin என்ற இரசாயனம் காரணமாகும். இது அவிப்பதன் மூலம் உணவாக உட்கொள்ள முடியும்.
அவிக்காமல் உணவாக முடியாது.
இதன் மருத்துவ
குணங்களாக கீழ்வருவன அறியப்பட்டுள்ளது.
1. இரத்த அழுத்தத்தைக்
குறைக்கும்
2. இரத்தக் கட்டிகள்
உருவாவதை தடுக்கும்.
3. உடலைக்
குளிர்ச்சியாக்கும்
4. இரத்த ஓட்டத்தை சீராக்கும்
5. மூல நோயினை தணிக்கும்
6. சமிபாட்டினை
இலகுவாக்கும்.
7. வயிற்றிலுள்ள பற்றீரியாக்களை
சமநிலைப்படுத்தும்
8 உயர் போசனையுடையது
9. உடலை
வலிமைப்படுத்தும்.
விவசாயிகள் இதை மேலதிக
முயற்சி இன்றி ஊடுபயிராக வரப்புகளில் வளர்க்கலாம்.
உணவு
ஆர்வலர்கள்/ஆய்வாளர்கள் இதை சுவையான களியாக, கூழாக எப்படி சமூகத்தில்
விரும்பப்படும் உணவாக மாற்ற முடியும் என்று ஆராய்ந்து சந்தைப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.