பட்டினி, பஞ்சம்,
உணவுப்பற்றாக்குறை பற்றி சரியாகப் புரிந்துகொள்ள அமர்தியா சென் {நோபல் பரிசு பெற்ற
இந்திய பொருளியல் நிபுணர்} எழுதிய " Poverty and Famines: An Essay on
Entitlement and Deprivation" என்ற இந்த நூலைப்படிக்க வேண்டும். ஆறு தொடக்கம்
பத்தாம் அத்தியாயம் வரை பல்வேறு உலகப் பஞ்சங்களின் அடிப்படைகளை ஆராய்கிறார்.
இதில் ஆறாவது
அத்தியாயம் பிரித்தானிய இந்தியாவில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் (1942 தொடங்கி 1948
வரை) எப்படி நாடு முழுவதும் தாக்கியது என்பது பற்றி விபரித்திருக்கிறார். இதன்
போது இலங்கையும் பிரித்தானிய இந்தியாவின் ஒருபாகம்தான்.
இதன் சுருக்கம் : இது
விவசாய உற்பத்திக் குறைவினால் ஏற்பட்ட பஞ்சம் இல்லை; அரசியல் பொருளாதார
நெருக்கடியால் இடைத்தரகர்களான வியாபாரிகள் பொருட்களை பதுக்கி கள்ளச்சந்தை
உருவாக்கி பணமுடையவர்கள் மாத்திரம் உண்ண முடியும் என்ற நிலையை உருவாக்க, அரசாங்கம்
அதை கண்டும் காணாமல் இருந்துகொள்ள 30 இலட்சம் மக்கள் மாண்டனர். இப்படி இறந்தவர்கள்
எல்லோரும் கூலித்தொழிலாளிகள்! பணமுடையவர்கள் எவருக்கும் உணவுப் பற்றாக்குறை
ஏற்படவில்லை.
ஆகவே பஞ்சம் உருவாகியது
வியாபாரிகளின் பதுக்கலாலேயே அன்றி விவசாய உற்பத்தி குறைந்ததால் அல்ல.
இதனால் இந்த
நூலாசிரியர் ஒரு முன்மொழிவை வைக்கிறார்; உற்பத்தியாளனுக்கும், நுகர்வோனுக்கும்
இடையில் அதிக இடைத்தரகர்கள் இருக்கும் போது இந்தப் பதுக்கல் தீவிரமடைகிறது.
இதனால்தான் உணவுச்
சந்தை என்பது உற்பத்தியாளனிடம் நேராக வாங்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும்.
தற்போது இலங்கையில்
பால்மா, எரிவாயு, எரிபொருட்களில் இப்படியான கள்ளச்சந்தை உருவாகியுள்ளது
அவதானிக்கக்கூடிய ஒன்று!
உணவுச் சந்தையில்
கள்ளச் சந்தை உருவாகினால் ஏழை, எளியவர்கள் வருமானமற்றவர்கள் ஆபத்தினையும்
பஞ்சத்தினையும் நோக்கிச் செல்வார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.