காளி தருவாள்
எண்ணி லாத பொருட்குவை
தானும்,
ஏற்றமும், புவி
யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன்
நேர்ந்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும்
அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும்
அருளும்
தருவாள் இன்றென தன்னை
யென்காளி;
மண்ணி லார்க்குந்
துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை
மாய்ப்பேன்.
தானம் வேள்வி தவங்கல்வி
யாவும்
தரணி மீதில் நிலைபெறச்
செய்வேன்,
வானம் மூன்று மழைதரச்
செய்வேன்
மாறி லாத வளங்கள்
கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை
நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச்
செய்வேன்,
நான்வி ரும்பின காளி
தருவாள்.
பாரதியார்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.