குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 09, 2022

தலைப்பு இல்லை

 

இன்று கிரியா யோகம் என்பது பிரபலமான சொல்! பலரும் கிரியா யோக தீட்சை பெற்றுள்ளோம் என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம்.

பதஞ்சலி, கிரியா யோகத்தை அனைத்து யோக சாதனைக்கும் உரிய ஒரு முழுமையான படிமுறையாக வரைவிலக்கணப்படுத்துகிறார்.

மனம், வாக்கு, உடல் எனப்படும் திரிகரணங்களினால் செய்யப்படும் எந்தவொரு செயலும் பதஞ்சலி மகரிஷி சொல்லும் இந்த நான்கு விஷயங்களைக் கடைப்பிடிப்பதால் கிரியா யோகமாக மாற்றலாம்.

|| தப: ஸ்வாத்யாய - ஈஸ்வர - ப்ரணிதானானி க்ரியா யோக: ||

1. தவம்

2. படிப்பு

3. செயல்

4. செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் ஆகிய நான்கும் கொண்டது கிரியாயோகம் என்கிறார்.

இங்கு தவம் என்றால் காட்டிற்கு போய் கண்களை மூடி தாடி வளர்த்து, சடை வளர்ப்பதல்ல;

தபஸ் அல்லது தவம் என்றால் ஒரு இலக்கை எடுத்துக்கொண்டு அதை நோக்கி மனதைச் செலுத்தினால் எமது  ஐம்புலன்களில் இருந்து வரும் தூண்டுதல்களால் எந்த குழப்பமும் மனதிற்கு வராமல் வைத்திருக்கும் வைராக்கியத்துடன் கூடிய பயிற்சி. தவம் பழகுவதற்கு இறைவன் போன்ற உயர்ந்த தத்துவங்களை ஆரம்பத்தில் எடுக்காமல் சிறிய மனதிற்கு பிடித்த விஷயங்களில் கூட இதைச் செய்து பழகலாம். சிறப்பாக காப்பி போடுவதைக் கூட தபஸாக மாற்றலாம்.

எப்படி தவம் பழகலாம் என்பதை சரியாக, முறையாக கற்றுக்கொள்ளும் செயலுக்கு ஸ்வாத்யாயம் என்று பெயர்.    

இதை செயலுக்கு கொண்டுவந்து செயற்படுத்துவது மூன்றாவது நிலை. இப்படிச் செயற்படும் போது, நாம் இதை செய்து முடிக்கிறோம் என்ற அகங்காரம் வரும் போது எம்மால் அதற்கு மேல் மனதை ஆர்வத்துடன் செலுத்த முடியாமல் போய்விடும். ஆகவே செய்யும் செயலால் வரும் அனைத்துப் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் அகங்காரம் உருவாகி எமது ஆற்றல் தடைப்படுவது தடுக்கப்படுகிறது.

மேற்குறித்த பண்புகளுடன் செய்யப்படும் எந்த செயல்களும் எமது சித்தத்தில் ஆழமாகப் பதிந்து விருத்திகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்காது! ஆகவே சாதகன் வெகுவிரைவில் சித்த சுத்தி பெறுவான்!

இந்தப் பண்புடன் செய்யப்படும் பிராணாயாமங்களையே கிரியா பிராணாயாமம் என்று சொல்கிறோம்.

மகாவதார் பாபாஜி தன்னுடைய யோகத்தினை கிரியா பிராணாயாமம், கிரியா ஆசனம், கிரியா தியானம் என்று பெயரிட்டதன் காரணம் ஆசனம், பிராணாயாமம், தியானம் செய்யும் போது மேற்குறித்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்பதாலேயே!

ஆசனம் செய்யும் போது செய்யப்படும் ஆசனத்தின் உடல் நிலையின் மீது முழுக்கவனத்துடன் சுவாசத்தை இணைத்தல் தவம்.

அதைச் சரியாக செய்வது எப்படி என்று ஆசிரியரிடம் கற்றல் ஸ்வாத்யாயம்.

அதைப் பயிற்சித்தல் கிரியா.

இறுதியாக பயிற்சி முடிவில் குருவினதும், இறைவனது அருளினாலும் நான் எனது பயிற்சியை செம்மையாக முடித்து அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று எண்ணுவது ஈஸ்வரப்ரணிதானம்.

இப்படிச் செய்தால் இது சித்த சுத்தி தரும் கிரியா யோகம்!

இப்படி காய்கறி வெட்டுவது, பயிர் செய்வது, கற்பது, தொழில் செய்வது என்று வாழ்வில் உள்ள அத்தனை செய்கையையும் கிரியா யோகமாக மாற்றும் வரைவிலக்கணத்தை பதஞ்சலி மகரிஷி விளக்குகிறார்.

வாழ்வே யோகம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஸ்ரீ மஹா கணபதி சதுராவர்த்தி தர்ப்பண மகிமை

ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடம் சாதனை பயிலும் ஒரு மாணவரின் அனுபவம் ************************************************************* தேவியை உபாசிக...