இன்று சர்வதேச யோகா தினம்
எல்லோரும் யோகா தினம்
கொண்டாடுகிறோம் என்று வகை வகையாக ஆசனங்கள் செய்து படம் போடுவதால் எமக்கு தெரிந்த
பத்மாசனத்தில் படத்தையும் போட்டுவிட்டு ஸ்ரீ அரவிந்தர் கூறும் யோகம் என்பதன்
விளக்கம் பற்றிப் பார்ப்போம்!
யோகம் என்றால் இணைவு
என்று பொருள் சொல்லப்பட்டால் எதை இணைப்பது என்ற கேள்வி எழும். இதைப் புரிந்துகொள்ள
நாம் கீழ்வரும் கூறுகளைப் புரியவேண்டும்.
1) ஆன்மா அல்லது உணர்வு
2) மனம்
3) உடல்
இவற்றையெல்லாம்
இணைக்கும் தொடர்ச்சியான ஆற்றல் "பிராணன்"
ஸ்ரீ அரவிந்தர்
கூறுகிறார், “எமது யோகம் என்பது உணர்வின் ஆரோகணம் (ஏறுதல்) அவரோகணம் (இறங்குதல்)
ஆகியவற்றின் இரட்டை இயக்கமாகும், ஒருவர் உயர்ந்த மற்றும் உயர்ந்த உணர்வு நிலைக்கு
உயர்கிறார், ஆனால் அதே நேரத்தில் ஒருவர் தனது சக்தியை மனதிலும் வாழ்க்கையிலும் மட்டுமல்ல,
இறுதியில் உடல் வாழ்க்கை வரை கீழே கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆரோகண அவரோகண
நிலைகளில் மிக உயர்ந்த நோக்கம் அதிமானச தளத்தினை அடைதலாகும். அதை பூமிக்குரிய
உணர்வில் கொண்டுவந்தால் மாத்திரமே தெய்வீக மாற்றம் சாத்தியமாகும். பூரண யோகமானது
முழுமையான இருத்தலினதும் தெய்வீக மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது
'சர்வமுக்தி' அல்லது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தெய்வ உருமாற்றத்தையும்
உள்ளடக்கியது.
ஸ்ரீ அரவிந்தரின்
அனுபவப்படி யோகம் என்பது ஒருவன் சாதனை மூலம் உணர்வினை தாழ் மனதிலிருந்து (Lower
mind) உயர்மனம், ஒளி மனம், தெய்வ மனம், அனைத்தையும் கடந்த கூட்டு மனம், அதிமனம்
(higher mind, illumined mind, intuition and overmind towards the supermind)
ஆகிய உயர் மனத்தளங்களை அடைவிப்பதே!
உடம்பினை வளைப்பது
மாத்திரம் யோகம் அல்ல! உடம்பினை வளைப்பதன் மூலம் மனதினை வளைத்து, மனதினால் உணர்வினை
உயர்தளத்திற்கு கொண்டு செல்லுதலே யோகம்!
உலகெங்கும் இந்த யோக
உணர்வு பெருக நாம் அனைவரும் செயல்படுவோம்!
படம்:
அமிர்தவர்ஷினியின் காப்புரிமை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.