ஒரு சில கலைஞர்கள்,
கவிஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்களைப் பார்த்தால் போதை, குடி, காமம் போன்ற தவறான
பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையின் ஒரு பகுதி இருள் நிறைந்ததாக காணப்படுவார்கள்.
இதற்குரிய காரணத்தை யோக
சாத்திரத்தின் பிராண வித்தை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
இது அவர்களின் கலையின்
செம்மையால் உருவாகும், அதிக பிராணனின் தவறான வழியில் செல்வதால் உருவாகும்
பிரச்சனையாகும்!
எந்த ஒரு கலையிலும்
நிபுணத்துவமும் என்பது மனதில் அந்தக்கலைக்குரிய செம்மையினை உருவாக்கி அதற்கு
பிராணசக்தியைச் செலுத்தி உடலின் மூலம் வெளிப்படுத்துவதாகும்.
உதாரணமாக நன்றாகப்
பாடுகிறோம் என்றால் மனதில் ஸ்வர நிலைகளை செம்மைப்படுத்தி குரல்வளையை இசைத்து பாட
வேண்டும். இது செம்மையாக அவன் தனது மனதிற்கும், உடலிற்கும் பிராண சக்தியினைக்
கொண்டுவர வேண்டும். இப்படி பிராண சக்தியினை அதீதமாகக் கொண்டு வருபவர்களே
எல்லோராலும் சிறந்த பாடகர்கள் என்று பாராட்டப்படுகிறார்கள்
இப்படி ஒரு கலையில்
செம்மையை அடையும் போது அதீத பிராண சக்தி வாய்க்கிறது. இப்படி அளவிற்கு அதிகமாக
பிராண ஆற்றல் வாய்க்கும் போது அந்தக் கலையினை பிரயோகிக்காத போதும் அவர்களிடம் அதிக
பிராணன் இருக்கும். அந்தப் பிராணன் அவர்களின் உடலையும், மனதையும் தன்னை வெளியேற்ற
உந்தித்தள்ளும். இந்த உந்தலை சமப்படுத்திக்கொள்ள அவர்கள் தமது சித்தத்தில் ஏற்கனவே
இருக்கும் காம சம்ஸ்காரங்களின் படி உந்தலாம்!
மனதில் அதிக அழுத்தம்
உண்டாவதால் தற்காலிகமாக மூளையை சாந்தப்படுத்த குடிப்பழக்கம் உருவாகலாம்.
இதனால் தான்
முற்காலத்தில் கலை பயில்பவர்களுக்கு அதிகமாக உருவாகும் பிராணனை இப்படி தாழ்
நிலைக்குச் செல்லாமல் தடுக்க எல்லாக் கலைகளையும் உயர் உணர்வாகிய இறைவனை நோக்கியே
இருக்க வேண்டும் என்று விதித்து வைத்தார்கள்.
நடனம் நடராஜருக்கு,
இசை தியாகராஜருக்கு,
என்றெல்லாம்
அர்ப்பணித்து கலையை ஆராதிக்கச் சொன்னார்கள்.
இன்று கலையை மனதில்,
உடலில் செம்மைப்படுத்தும் கலைஞர்கள் தமது கலையால் பெறும் பிராண ஆற்றலை உயர்
உணர்விற்கு செலுத்தத் தெரியாத போது தாழ் உணர்வுகளில் சிக்கிக்கொண்டு தடுமாறி
விடுகிறார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.