இன்று (16 ஜூன் 2022, காலை 0550 – 0745) பதஞ்சலி யோக சூத்திர சாதனா பாத வகுப்பில் நாம் கற்றவை;
மனதில் ஏற்படும்
குழப்பங்களை ஆராய்வதற்கு பதஞ்சலி ஐந்து காரணங்கள் (roots) கிலேசங்களாக இருப்பதாகவும்,
ஒவ்வொரு சித்த சம்ஸ்காரமும் நான்கு நிலைகளில் இருப்பதாகவும் ஒரு அழகிய (5+4 = 9)
09 factor வரைபடத்தைத் தருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் தமது மனம் எப்படி
இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
1. ஐந்து கிலேசங்கள்
a. கிலேசம் – 01:
அவித்தை - அறியாமை
b. கிலேசம் – 02:
அஸ்மிதை - அகங்காரம்
c. கிலேசம் – 03: ராகம்
- விருப்பு
d. கிலேசம் – 04:
துவேசம் - வெறுப்பு
e. கிலேசம் – 05:
அபினிவேசம் – பயம்
2. சித்த
சம்ஸ்காரங்களின் நான்கு நிலைகள்
a. சித்த சம்ஸ்கார நிலை
– 01 : பிரஸுப்தம்
b. சித்த சம்ஸ்கார நிலை
– 02: தனு
c. சித்த சம்ஸ்கார நிலை
– 03: விச்சின்னம்
d. சித்த சம்ஸ்கார நிலை
– 04: உதாரம்
3. வரைவிலக்கணங்கள்
a. பிரஸுப்தம் –
வேரூன்றிய விதை, சித்த விருத்திக்கு மூலம்
b. தனு – அடக்கக் கூடிய
சித்த சம்ஸ்காரம்
c. விச்சின்னம் – சில
வேளைகளில் அடக்கலாம், சில வேளைகளில் அடக்க முடியாதது.
d. உதாரம் – சந்தர்ப்ப
சூழ்நிலைகள் ஏற்படும் போது கட்டாயம் வெளிப்பட்டே தீர்வது.
4. பதஞ்சலி கிரியா
யோகத்தின் நோக்கம் உதார, விச்சின்ன நிலைகளில் இருக்கும் சித்த சம்ஸ்காரங்களை
மெலிவித்து தனு, பிரஸுப்த நிலைகளுக்கு கொண்டுவருதல்.
இந்தச் சொற்களை
சித்தத்தில் நன்கு பதிவித்துக்கொண்டு வகுப்பில் கூறப்பட்ட உதாரணங்களை உள்வாங்கி
உங்களுடைய சித்த விருத்திகளை ஆராயுங்கள்.
மனதைப்
புரிந்துகொண்டவர்களாவீர்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.