ஜோதிடம் பார்க்கிறோம், படிக்கிறோம் எனும் எல்லோரும் அதனுடைய ஆழமான
விதிகளைப் புரிந்துகொள்வதில்லை! பெரும்பாலும் ஜோதிடம் கற்கவேண்டும் என்பதோ,
எந்தக்கலையைக் கற்க நினைப்பவர்களதும் உளவியல் மற்றவர்களை விட தன்னிடம் ஒரு
சிறப்புத் தகுதி இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவே இருக்கும்!
எந்தவொரு கலையிலும்
கற்று முடித்துவிட்டோம் என்ற நிலை இல்லை; கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது
மட்டும்தான் உண்மை!
ஜோதிடம் கற்பவர்கள்
பெரும்பாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியவோ, தமக்கு ஏதாவது தவறாக
நடந்துவிடும் என்ற சிந்தனையுடனேயே ஜோதிடத்தை அணுகுகிறார்கள். ஆனால் பராசர மகரிஷி
எப்போது மனச் சமநிலையுடையவனும், குருபக்தி மிகுந்தவனும், சத்தியத்தை மாத்திரம்
பேசுபவனும், கடவுளில் நம்பிக்கையுள்ளவனுக்கு மாத்திரமே ஜோதிடம் கற்பிக்கப்பட
வேண்டியது என்கிறார்.
சந்தேகபுத்தியுள்ளவனும்,
குதர்க்கம் நிறைந்தவனும், கடவுள் மீதோ, குருமீதோ நம்பிக்கையில்லாதவனுக்கும் இந்த
வித்தை மேலும் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்.
உண்மையில் ஜோதிடத்தின்
உண்மைத் தன்மையை அறிய வேண்டுமானால் அதன் மூல நூல்களைத் தொட வேண்டும்!
எனது தனிப்பட்ட
தேடல்களில் ஒரு கலையினைப் பற்றி அறிய வேண்டும் என்றால் வேர்வரை சென்று
புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான்!
ஜோதிடத்தின்
அடிப்படையைப் புரிந்துகொள்பவர்கள் ஜோதிடம் எமது கண்களுக்குப் புலனாகாத சக்திகள்
எமது மனதின் சித்தம் என்ற பகுதிக்கூடாக எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பது
பற்றிய ஒரு மறையியல் கலை என்பதை ஜோதிட மூல நூலான ப்ருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்
படிப்பதன் மூலம் புரிந்துகொள்வார்கள்.
பராசர ஹோர சாஸ்த்திரம்
ஒருவனுடைய கர்மம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கும் சுலோகத்தில்
இப்படிச் சொல்லுகிறது.
ஒருவன் பிறக்கும் போது
கிழக்கு வானில் இருக்கும் ராசி - லக்கினமும் - அது சார்ந்து நவக்கிரகங்களும்
இருக்கும் நிலை அவனுடைய கர்மங்களை செயற்படுத்தும் குறிகாட்டிகளாக இருக்கிறது
என்கிறார்.
இதுபோல் 86 வது
அத்தியாயத்தில் கிரகங்களின் ஆற்றல் குறைவதை தியான சாதனைகள் மூலம் ஈர்க்கலாம் என்று
விளக்குகிறார்கள்.
இந்த நூல் பராசர
முனிவர் தனது மாணவனாகிய மைத்திரேயருக்கு கூறிய வடிவில் இருக்கிறது. ஜோதிட சாஸ்த்திரத்தை
ஆழமாக கற்க விரும்பவர்கள் கற்க வேண்டிய நூல்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.