இருபது வருடங்களுக்கு
மேல் ஒரு இயற்பியல் விஞ்ஞானியாக சந்தேகத்துடன் கேள்வி கேட்பதையே தனது மனப்பழக்கமாக
வைத்திருந்த ஒரு இயற்பியலாளர் திடீரென ஒரு தேவி உபாசகராக மாறி அகவயப்படுவதற்கு சுய
ஆன்மீக அனுபவம் தேவைப்படுகிறது.
இயற்பியல் விஞ்ஞானியாக
எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் (Dr. N. Prahaladha Sastry) தனது
பயணத்தில் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இறைவன் மேல் நம்பிக்கையை
ஏற்படுத்தியது என்று கூறுவார். அத்தகைய ஒரு அனுபவம் இங்கே தமிழில்:
குருநாதரிற்கு தியான
அனுபவங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் அவரது தியானத்தின் போது
மனக்கண்னில் "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள்
தோன்றியது. இதன் அர்த்தம் "பிரபஞ்சம் இறைவனால் வாழ்கிறது, இறைவனால்
சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்தக் காட்சியின் சில
நாட்களுக்குப் பிறகு, அவர் TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்)
ஐச் சேர்ந்த சக ஆய்வாளரது வீட்டிற்குச் சென்றார், அவர் நிறைய ஆன்மீக புத்தகங்களைக்
கொண்ட விரிவான நூலகத்தை பராமரிக்கிறார். அவரது புத்தக அலுமாரிகளை நோட்டமிடும்போது
ஈஷோபநிஷத்தின் சிறுகுறிப்பு பதிப்பு ஒன்று கண்களிற்கு பட்டது. அந்த நூலைத்
திறந்தபோது தான் தியானத்தின் காட்சியில் கண்ட "ஈஸாவஸ்யமிதம் சர்வம் யத்கின்ச
ஜகத்யாம் ஜகத்" என்ற வரிகள் அதில் அப்படியே இருப்பதைக் கண்டு திகைத்துப்
போனார்.
இந்த அனுபவத்தை அவர்
இப்படி விபரித்தார்;
எனது தர்க்கத்துடன்
கூடிய பகுத்தறிவு மனம் சற்றே சிதைந்து போனது; எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத
ஒரு புத்தகத்திலிருந்து எப்படி நான் முதலே வாசித்திருக்க முடியும். அப்படியென்றால்
இது ஏற்கனவே மரபணுக்களில் இருந்ததா? அந்தத் தகவலை எனது மனம் அணுக முடிந்ததா?
உண்மையை அணுக (அறிவியலுடன் கூடிய) பகுத்தறிவு மாத்திரம் தான் வழி என்ற எனது
புரிதல் படிப்படியாக உடைந்து கொண்டிருந்தது. உண்மையினை அறிவதற்கு தர்க்கத்துடன்
கூடிய பகுத்தறிவற்ற, உணர்ச்சிகளால், தர்க்கமற்ற முழுமையான வழிகள் இருப்பதை நான்
உணர ஆரம்பித்தேன்.
தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த
நாத சரஸ்வதி Homi J. Bhabha இனால் ஆரம்பிக்கப்பட்ட TIFR (டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப்
ஃபண்டமெண்டல் ரிசர்ச்) இனது அணு இயற்பியல் விஞ்ஞானியாக பணியாற்றியவர். தனது அக
அனுபவத்தின் பின்னர் தேவி உபாசகராக பலருக்கும் குருவாக உலகெங்கும் அறியப்பட்டவர்,
எனது குருநாதர்!
From The Goddess And
The Guru A Spiritual Biography Of Sri Amritananda Natha Saraswathi by Michael Bowden
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.