யோக தந்திர சாஸ்திரத்தில் முள்ளந்தண்டும் மூளையும் மனித உடலின்
உயர் பரிணாமத்தின் விளைவாகக் குறிப்பிடப்படுகிறது. மனிதனுக்கு மாத்திரமே
முள்ளந்தண்டு பூமிக்கும் செங்குத்தான புவியீர்ப்பினை வென்று அண்டத்தினை நோக்கி
விருத்தியடைந்துள்ளது. அதுபோல் Cerebrum என்ற விருத்தியடைந்த மூளையும் இருக்கிறது.
இதனால் மனிதனால் தெய்வ சக்திகளை கவர முடியும் என்பது தாந்திரீக மறையியலின்
விளக்கம்.
குண்டலினி சக்தி பற்றி
விரிவாக எழுதிய ஆர்தர் அவலோன் நவீன உடற்கூற்றியலிற்கும் தாந்திரீக
உடற்கூற்றியலுக்குமிடையிலான ஒப்பீட்டினை தனது நூலில் முன்வைக்கிறார்.
தாந்திரீக மறையியலில்
பௌதீகமான முள்ளந்தண்டினை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஸக்தியானவள் ஆறு
ஆதாரங்களாகவும் ஆற்றலாகவும் மனித உடலில் வெளிப்படுகிறாள். ஆறு ஆதாரச்சக்கரங்கள்
என்பவை பராசக்தி தன்னை பஞ்சபூத பிரக்ருதியாக வெளிப்படுத்தும் இடங்கள். ஏழாவது
சக்கரம் சஹஸ்ராரம் என்பது எல்லாச் சக்கரங்களினதும் ஆற்றல் உறையும் பரமசிவம்
பராசக்தியின் இருப்பிடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சுவாரசியமாக
முள்ளந்தண்டு நவீன உடற்கூற்றியலில் ஐந்து பகுதிகளாக cervical, Thorasic, Lumber,
Sacrum, Coccyx என்று பகுக்கப்படுகிறது. இந்த ஐந்துபகுதிகளும் தாந்திரீக
உடற்கூற்றியலில் பஞ்ச பூத தத்துவங்களாக குறிப்பிடப்படுகிறது.
நவீன உடற்கூற்றியல்,
தாந்திரீக ஆதாரச் சக்கரம், பஞ்சபூதம் முறையே கீழே தரப்பட்டுள்ளது.
Cervical - விசுத்தி -
ஆகாயதத்துவம்
Thoracic - அனாகதம் -
வாயு தத்துவம்
Lumber - மணிப்பூரகம் -
அக்கினி தத்துவம்
Sacrum - சுவாதிஷ்டானம்
- அப்பு (நீர்) தத்துவம்
Coccyx - மூலாதாரம் -
ப்ருதிவி (நில) தத்துவம்
Medulla to Pineal
gland - ஆக்னை - மனத்தத்துவம்
above Pineal gland to
Cerebrum - சஹஸ்ராரம் - பரமசிவ பராசக்தி தத்துவம்.
இப்படி ஸ்தூல உடலுடன்
பொருத்தி அந்தப்பகுதிகளின் மேல் நுண்மையான ஏகாக்கிர மனதினால் ஸமாதி பழகுவதால் யோகி
தனது நுண் ஆற்றல்களை விழிப்பிக்க முடியும் என்பதே யோக தந்திர சாத்திரத்தின்
அடிப்படை.
இந்த அடிப்படையிலேயே
ஸ்ரீ காயத்ரி யோக சாதனை, ஸ்ரீவித்யா தந்திரங்கள், மற்றெல்லா தந்திரசாஸ்திரங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.