எதிர்வரும் 09ம் திகதி ஜூன் மாதம் முதல் பதஞ்சலி யோக சூத்திரம்
சாதனா பாதம் கலந்துரையாடல் சிருஷ்டியின் வகுப்புகளாகத் தொடங்குகிறது.
பதஞ்சலி மகரிஷி மனம்
பற்றிய விதிகளை அறிவியலாக தொகுத்தவர்!
ஸாதனா என்றால்
சாத்தியமாக்குதல் என்று அர்த்தம்! பதஞ்சலி சித்தத்தின் (மனதின்) விருத்திகளை
அடக்குவதற்கு இரண்டு பகுதிகளாக விதிகளைத் தந்துள்ளார்.
முதலாவது ஸமாதி பாதம்
என்பது ஏற்கனவே முற்பிறப்பில் யோக சாதனையினைக் கைக்கொண்டு அப்பியாசம், வைராக்கியம்
என்பவற்றை கைக்கொண்டு யோகத்திலிருந்து நழுவிய யோகப் பிரஷ்டர்களாகிய உயர் சாதகர்களுக்குரியது!
இப்படியில்லாத முதல் முதலாக யோக சாதனை செய்யப்போகிறோம் என்று சாதனை
தொடங்குபவர்களுரியது சாதனா பாதம்.
ஸாதனா என்றால்
சாத்தியமாக்குதல் என்று அர்த்தம்! இந்தப்பகுதியில்
கிரியா யோகம் பற்றிய
விளக்கம்
மனக்கிலேசங்களின்
வழிகள், அவற்றை நிவர்த்திக்கும் முறைகள்
கர்மா என்றால் என்ன?
முக்குணங்களும் 24 ஆன்ம
தத்துவங்களும்
துக்கம் ஏன்
ஏற்படுகிறது?
அஷ்டாங்க யோக விளக்கம்
ஏழு வித அறிவுகள்
அவற்றை அடையும் வழி
இப்படி சுவாரசியமாக
மனதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி உரையாடப்படும்.
பலரும் யோக தத்துவம்
என்றவுடன் ஸமாதி, கடவுள் என்று குழப்பி விடுகிறார்கள்.
வாழ்வே யோகம் என்ற
அடிப்படையில் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் யோக தத்துவம் உங்களுக்கு உதவும் என்பதை
இந்த வகுப்பு உணர்த்தும்;
இணைய ஆர்வமுள்ளவர்கள்
விபரத்திற்கு கீழே comment போடவும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.