ஸ்ரீ காயத்ரி சஹஸ்ர நாம சாதனை
இந்த வசந்த நவராத்ரியில் பத்து நாட்கள் குரு நாதர் ஸ்ரீ ஸக்தி சுமனனனின் வழிகாட்டலில் உலகெங்குமுள்ள காயத்ரி சாதகர்கள் ஸ்ரீ காயத்ரி லகு அனுஷ்டானமும், காயத்ரி சஹஸ்ர நாம சாதனையும் செய்தனர்.
காயத்ரியின் சூக்ஷ்ம ஆற்றல்கள் அனந்தமானவை; எண்ணில் அடங்காதவை; இந்த எண்ணிலடங்காத ஆற்றலைத் தொகுத்து மனித மனதிற்கு உணர்த்தும் தோத்திரமே சஹஸ்ர நாம ஸ்தோத்திரம்.
சஹஸ்ர என்ற சொல் எல்லையற்றது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாராம்சத்தில் ஆயிரம். ஆனால் மற்ற இடங்களில் எண்ணிலடங்காத எண்ணைக் குறிக்க ஆயிரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைவனின் பிரார்த்தனை 'சஹஸ்ரசிர்ஷா'. இந்த பிரார்த்தனையில், கடவுள் 'சஹஸ்ரபாஹா, சஹஸ்ரபாதா, சஹஸ்ரநேத்ரா' என்று கூறப்படுகிறது. இங்கே அந்த ஸஹஸ்ரத்தின் அர்த்தம் எல்லையற்றது என்பதாகும்.
சஹஸ்ர நாமம் என்பது ஒர் ரிஷி எல்லையற்ற ஆற்றல்களை தனது தபஸினூடாக அனுபவித்த நிலைகளை ஆயிரம் எண்ணிக்கைக்குள் மனிதர்களுக்கு அனுவம் கிடைக்க திருஷ்டித்த மந்திரங்கள்.
காயத்ரி தேவியின் அனந்த சக்திகளை விபரிக்கும் இரண்டு சஹஸ்ர நாமங்கள் எமக்கு குருபரம்பரையினூடாக கிடைத்த்திருக்கிறது.
1) தேவிபாகவதத்தில் இருக்கும் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாமாவளி - இது பிரம்மாவினால் திருஷ்டிக்கப்பட்டது. விஞ் ஞானமய கோஷ விருத்திக்கானது.
2) ருத்யாமள தந்திரத்தில் இருக்கும் தத்கார சஹஸ்ர நாமம் - இது பைரவ ரிஷியால் தரப்பட்ட தந்திர சாதனைக்குரியது.
இந்த நவராத்ரியில் அகராதி க்ஷகராந்த சஹஸ்ர நாம சாதனை ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களால் கற்பிக்கப்பட்டது.
இந்த சஹஸ்ர நாம சாதனையின் பலனை தேவிபாகவத்தில் ஸ்ரீ நாராயண ரிஷி ஸ்ரீ நாரத ரிஷியிற்கு கீழ்வ்ருமாறு கூறுகிறார்.
ஸர்வ பாப நிவர்த்தி ஸர்வ ஸம்பத்துக்களையும் தரக்கூடியது
ஓ நாரதா, இது காயத்ரி தேவியின் ஆயிரம் பெயர்கள்.
புண்ணியத்தை அருளும், எல்லா பாவங்களையும் அழித்து, பெரும் செல்வத்தை அளிக்கும். 156॥
இதனால் காயத்ரியின் ஆயிரம் நாமங்கள் அனைத்து தோஷங்களையும் நீக்கக்கூடியது. அஷ்டமியில் இந்த மந்திரத்தை சித்திபெற்ற குருவுடன் சேர்ந்து சொல்ல வேண்டும். 157॥
இதை ஒரு நல்ல பக்தனுக்கும், நல்ல சீடனுக்கும் சொல்ல வேண்டும். அதை வழிகேடு தேடுபவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பாசமிகுதியால் சொல்லக்கூடாது. 159॥
இது இரகசியத்திலும் இரகசியமானது; மிக உயர்ந்த பெரிய சாதனை.
இந்த சாதனையைப் பூர்த்தி செய்வதன் மூலம் சாதாரண மனிதன் உயர்ந்த விடயங்களைச் செய்வதற்குரிய தகுதியைப் பெறுகிறான்.
இந்த காயத்ரி சஹஸ்ர நாம சாதனையைச் செய்யும் ஒரு ஏழை செல்வத்தைப் பெறத் தகுதியுடையவனாகிறான்.
முக்தியை நாடுபவர்களுக்கு முக்தியையும், காமத்தை நாடுபவர்களுக்கு அவர்கள் இச்சைகளையும் நிறைவேற்றுகிறது.
நோயுற்றவன் நோயிலிருந்து விடுபடுகிறான்,
அடிமையாக கட்டுப்பட்டவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறான். 162॥
எத்தகைய பாபங்களைச் செய்தாலும் இந்த சஹஸ்ர நாம சாதனையைச் செய்வதால் அந்தப் பாவங்களிலிருந்து ஒருமுறை விடுவிக்கப்படுகிறான்; இதன் அர்த்தம் மீண்டும் அதே பாவத்தைச் செய்துவிட்டு இந்த சாதனையால் பலனைப் பெற முடியாது என்பதாம் 163॥
தாமரையில் பிறந்தவனே, நான் உனக்குச் சொன்ன தூய ரகசியம் இதுதான். இந்த சஹஸ்ர நாம சாதனை முழுமையான உண்மையுடன் செய்யும் போது சாதகர்களை பிரம்மசாயுஜ்யம் என்ற சத்தியத்துடன் ஒன்றிணைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 165॥
இந்த அரிய சாதனையை கற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனையினை செய்ய வேண்டும்.
இன்னும் பல சாதனா இரகசியங்கள் படிப்படியாக தகுதியுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.