ஒரு ஆண் அடிப்படையில் அகுலா - குடும்பம் அற்றவனாகவே இருக்க விரும்புகிறான்; சோம்பேறியாக உலக வம்பு அளந்து கொண்டு மனம் போன போக்கில் திரிந்து கொண்டு கற்பனையான ஆசைகளை மனதில் பதட்டப்படுத்திக்கொண்டு தன்னை ஏமாற்றிக்கொண்டிருப்பவன் தனது உடல் உந்தலால் இன்பம் பெற என்று பெண்ணிடம் வந்து மாட்டிக் கொள்கிறான்.
அப்படி மாட்டிக்கொண்டவனை பெண் குடும்பம், பிள்ளைகள் என்று பந்தப்படுத்துகிறாள். அப்படி மாட்டிக்கொண்ட ஆணிடம் பெண் மறைமுகமாக அவனின் ஆண்மைக்குச் சவால் விடுகிறாள்; உனக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகிறது; எனக்கு வீடு வாங்கினாயா? பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைச் செய்தாயா? என்று உடல் இச்சைக்குள் மாத்திரம் சிந்திக்கும் ஆணின் புத்தியை ஊர்த்துவ முகமாக மேல் நோக்கி உயர்ந்த சக்தியாக மாற்ற உந்துகிறாள். இதை ஏற்றுக்கொண்ட ஆண் தனது பார்வையும், ஆற்றலும் விரிந்து ஹீரோவாகவு உருவெடுக்கலாம்.
இதற்கு காம சாத்திரத்துடன் காதல் சாத்திரமும் முறையாகத் தெரிய வேண்டும்; பெண் தன்னிடம் வைக்கும் நிபந்தனையை அவள் எதிர்பார்க்கும் முன்னர் பூர்த்தி செய்யும் ஆற்றலும் வலிமையும் இருக்க வேண்டும்.
சோம்பேறிகளும், அக உடல் வலிமையற்ற ஆண் பெண்ணிடம் தோற்றுப் போகின்றான்.
இன்பம் பெற வேண்டிய குடும்பம் என்ற அமைப்பு சுமையாகிவிடுகிறது. மறைமுகமாக தனது தோல்வியை மறைக்க பல்வேறு வழிகளைத் தேடுகிறான். உடல் இச்சையில் மாட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் தாழ் உணர்வுகளிலேயே சிக்கிக் கொண்டு பெண்ணை வெல்லமுடியாதவனாகிறான். பெண்ணை தனது அதிகாரத்தால், ஆணவத்தால், பலத்தால் கட்டுப்படுத்த முனைகிறான். அடிப்பட்ட சிங்கம் போன்று வன்முறை பிடித்த மனமுடையவனாகிறான். தான் பலவீனன் என்பதை உணர மறுக்கிறான்.
ஒரு ஆணை சுதந்திரனாக இருக்க அனுமதிக்கும் பெண் கிடைப்பது வரம்
அப்பெண்ணும் அப்பெண்ணால் வரும் குழந்தைகளும் இன்பமாக வாழ அவள் வேண்டியதை அவள் மனக்குறைப்படு முன்னர் தீர்த்து வைப்பது ஆணின் அறம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.