குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 15, 2023

சிவ சீவ ஐக்கியம் - மெய்ப்பொருள் இரகசியம் - 02

சிவஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞானயோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளை இங்கு எளிய தமிழில் காண்போம்:
அடுத்து அறியப்படும் நிலை பற்றிய உவமைகள்.... 
எள்ளாகிய சீவனின் சிவம் நெய்யாக இருக்கிறது என்று எண்ணி சீவனிற்குள் சிவம் இருக்கிறது என்று எண்ணி மயங்கிவிடக்கூடாது என்று அடுத்த உவமானம் தீ இரும்பு சொல்லப்படுகிறது. 
இங்கு தீ சிவம், இரும்பு சீவன்; எப்படி தீ இரும்பை உருக்கி தனது ஆற்றலை வெளிப்படுத்தி இரும்பைச் சுத்திக்கிறதோ அப்படி சிவம் உயிரிற்குள் இருந்தாலும் மலங்களை நீக்க வல்ல அக்கினி தத்துவமாய் இருக்கிறது. சிவத்தை சீவனுக்குள் உணரத்தொடங்கும் போது அது தீயாக ஒருவனில் வெளிப்படுகிறது. இரும்பை உருக்கும் போது அதனில் தீ வெளிப்பட்டாலும் அதைத் தனியாக உணர முடியாது. 
இதனால் உயிராகிய சீவன் இல்லாமல் சிவம் இல்லையா என்றால் அதற்கு உவமானம் "பாணியுப்பு" நீரில் கலந்த உப்பு! உப்பில்லாமல் நீர் தனித்து இருக்கும்! அதுபோல் சீவன் இல்லாமல் சிவம் இருக்கும் ஆனால் சிவத்தில் கலந்தால்தான் அது சீவன்! 
இப்படி உவமானம் சொன்னால் உப்புக்கலக்காத நீர் இருப்பதால் உயிர் சிவத்தின் தொடர்பில்லாத நிலை ஏதும் இருக்கிறதா என்றால் அப்படியொரு நிலை இல்லை என்பதற்கு உவமானமாக "விண்ண நிலம்" என்ற உவமானம் தரப்பட்டிருக்கிறது. காற்று எப்படி ஆகாயத்தைவிட்டு நீங்காமல் ஆகாயம் இடம் கொடுப்பதால் அசைகிறதோ அதுபோல் உயிரின் அசைவு என்பது சிவத்திற்குள்ளேயே இருக்கிறது. 
அடுத்த உவமானம் உடல் உயிர்; உடலை உயிர் எப்படிச் செலுத்துகிறதோ அப்படி உயிரை சிவம் அசைவிக்கிறது. உடல் இயங்குவதற்கு ஆதாரம் உயிர்; உயிர் இயங்குவதற்கு ஆதாரம் சிவம். உயிர் விழிப்பு நிலையில் ஸ்தூல உடலையும், கனவு நிலையில் சூக்கும உடலையும், சுழுத்தியில் காரண உடலையும் இயக்குவது போல் சிவமாகிய இறைவன் வெவ்வேறு நிலைகளில் உயிரை இயக்குவானோ என்ற கேள்விக்கு எக்காலத்திலிரும் நீரைவிட்டுப் பிரியாத நிழல் போன்று நீர் நிழல் உவமானம் கூறப்பட்டது; உடலை இயக்கும் உயிர் அவத்தை மாறுபடுவதற்கு ஏற்ப மாறுவது போல் உயிரை இயக்கும் சிவம் மாறுபாடுகளை அடைவதில்லை. 
உயிரை இயக்கும் சிவம் எக்காலத்திலாவது உயிரை விட்டு பிரிந்து நிற்குமா என்ற கேள்வி எழுந்தால் இல்லை அது நீருடன் நிழல் இருப்பது போல் பிரியாதது என்ற உவமை சொல்கிறார். இங்கு நீர் ஆன்மா நிழல் சிவம். 
நீரானது தனக்குள் உவர்ப்பு, கைப்பு முதலிய சுவைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு எப்படி நிழலைத் துணைகொள்வதில்லையோ அப்படி சீவன் தான் புலன் களால் செய்யும் கலப்பிற்கு இறைவன் உதவி தேவைப்படுவதில்லை. 
இப்படி கலப்பிற்கு இறைவனாகிய நிழலின் உதவி தேவைப்படாவிட்டாலும் அனுபவத்தை அறிவதற்கு இறைவனது உதவி தேவை என்பதை உச்சிப் பளிங்கு என்ற உவமையால் சொல்லுகிறார். சூரியனின் ஒளி அருகில் இருக்கும் போது பளிங்கு தன்னுள் ஏற்று தெறிப்படையச் செய்து பல வண்ணங்களை உருவாக்கி, சூரியன் உச்சியில் இருக்கும் போது சிதறல் இல்லாத எதையும் பற்றாத வெள்ளை ஒளி உருவாகுவது போல் சீவனுள் சிவம் புலன் களால் அனுபவத்தைப் பெற்று இயக்கும் போது சிதறுகின்ற வண்ண ஒளி போலவும், முக்திக்காலத்தில் இறைவனோடு உயிர் கலந்து வேறுபாடு அற்ற நிலையை அடையும் என்பதை உச்சிப் பளிங்கு என்ற உவமையால் கூறுகிறார். 
உச்சிப்பளிங்கு என்ற நிலையில் பளிங்கு தனது நிலையை இழப்பதில்லை; அப்படியென்றால் முக்தி நிலையில் சீவன் சிவத்தினுள் அடங்குவதில்லையா? என்ற கேள்விக்கு முக்திக்காலத்தில் சீவனுக்கு தான் என்ற தனித்த அறிவு நிலை இல்லாமல் போய் சிவத்துள் மறையும் என்பதற்கு உவமானமாக பகல் விளக்கு என்ற உவமை தரப்பட்டுள்ளது. பகலில் விளக்கேற்றினாலும் அது சூரிய ஒளி இருப்பதால் பிரயோசனம் இல்லாதது போல் முக்தி நிலை அடைந்த சீவனது தனித்த நிலை புலப்படாது. 
அப்படியென்றால் பகல் காலத்து விளக்கு பயனற்றது போல் முக்தி அடைந்துவிட்டால் உயிருக்கு இன்ப அனுபவம் எதுவும் இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக பால் நீர் என்ற உவமை தரப்படுகிறது. எப்படி பால் நீரை தனக்குள் எடுத்துக்கொண்டு நீரிற்கு பாற்ச் சுவையைத் தருகிறதோ அப்படி சிவம் சீவனைத் தன்னுள் அடக்கி சிவமாக்கி விடுகிறது. 
இப்படிச் முக்தியனுபவத்தில் சிவமாகி அனுபவிப்பதால் சிவத்திற்கு நிகராக ஒளியுடையதா உயிர் என்று எண்ணி மயங்கி விடாமல் இருக்க, எப்படி கண் வெளியில் சூரியனதும் புற ஒளி இன்றியும் பிரகாசிக்காதோ அப்படி உயிரிற்கு சிவமின்றி ஒளியில்லை! ஆகவே கண்ணிரவி உவமை குறிப்பிடப்பட்டது. 
கண்ணொளியும் சூரியனொளியும் கலந்து நின்றாலும் கண்ணும் சூரியனும் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் உயிரின் அறிவும் சிவத்தின் அறிவும் கலந்தாலும் இரண்டும் வேறு வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றுபவர்களுக்கு கண்ணுக்குள் உண்மையில் இருந்து பார்ப்பது உணர்வும் அதிலிருந்து வரும் ஒளி என்ற உண்மையை உணர உணர்வொளி என்ற உவமானம் சொல்லப்பட்டது; இறைவன் உயிரிற்குள் உணர்வு ஒளியாய் நிற்பதால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது என்று கூறினார். 
உடல் உயிர்
நீர் நிழல்
உச்சிப் பளிங்கு
பகல் விளக்கு
பால் நீர்
கண்ணிரவ் 
உணர்வொளி
ஆகிய ஏழு உவமைகளும் சிவமும் சீவனும் உடனாய் நிற்றலை விளக்குபவை.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...