குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 12, 2023

அன்னை உபாசனை

3. ஶ்ரீமத்ஸிம்ʼஹாஸனேஶ்வரீ 
லலிதை சிம்மத்தின் மேல் சவாரி செய்கிறாள். அவள் பூரண மங்களகரமுடைய ஸ்ரீத்துவம் உடையவள். 
சாதனா மந்திரம்: 
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஶ்ரீமத்ஸிம்ʼஹாஸனேஶ்வர்யை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
ஸிம்ஹா என்றால் சிங்கத்தைக் குறிக்கும். அது ஆசனமாக பயன்படும் போது அது தாங்குகிறது. இது லலிதையைத் தாங்கும் ஆசனத்தைக் குறிக்கிறது. லலிதையின் ஆற்றலைத் தாங்கி வரும் மந்திரத்தையும் இது குறிக்கும். இந்தச் சொல்லில் எழுத்துக்களை மாற்றினால் லலிதையின் பலவிதமான உபாசனை இரகசியங்களைத் தரக்கூடியது. 
தமோ குண நிலையில இருக்கும் ஒருவன் லலிதா சாதனை மூலம் ஸிம்ஹ நிலையில் எனப்படும் ரஜோ குணத்தை முதலில் தோற்றுவிக்கும். 
ஸிம்ஹமாகிய சிங்கம் ரஜோ குணம் நிறைந்தது. வலிமையான ஆற்றலுடன் கூடிய செயலைக் குறிக்கும். வலிமையும் ஆற்றலும் முதல் நிலையில் ஹிம்சையாகவே வெளிப்படும். பின்னர் அது ஹம்ஸி எனப்படும் பெண் அன்னத்தைக் குறிக்கும் சொல்லாக மாறும் நிலையை அடையும். ஹம்ஸம் சித்தசாகரத்தில் அசையாமல் நிற்கும் சம நிலையுடன் கூடிய சமாதி நிலையைக் குறிக்கும் குறியீடு. ஹம்ஸம் பகுத்தறியும் புத்தியைக் குறிக்கும். எப்படி அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரிக்கும் ஆற்றல் இருக்கிறதோ அப்படி லலிதையை உபாசிக்கும் சாதகன் அநித்தியத்திலிருந்து நித்தியமான உண்மையை அறியும் ஆற்றல் பெறுவான். லலிதையின் மந்திர சாதனை ஹம்ஸி நிலையை அடையும் போது மந்திரம் ஸரஸ்வதி நிலையை அடையும். இப்போது உபாசனை ஸத்துவ நிலையை அடையும். ஸத்வ நிலை உபாசனை செயல்களில் அதிகம் நாட்டம் இல்லாமல் தான் அடைந்த நிலையை ஆழமான அமைதியில் அனுபவிக்கும் நிலையைத் தரும். இது சரஸ்வதியின் தன்மை; 
சரஸ்வதி படைப்புத் திறனின் உச்சமாக இருப்பதால் எல்லவித புத்தாக்க உணர்வு (creativity), ஸ்தூல, சூக்ஷ்ம, காரண நிலைகளில் அனுபவிக்கும் அனைத்தும் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்கச் செய்யும். ஹம்ஸ என்றால் “அஹம் ஸ” என்று பொருள்; இதன் அர்த்தம் நான் காண்பதெல்லாம் என்னில் இருந்து வெளிப்படுபவை என்ற பூரண அறிவு. 
ஒருவன் ஸ்ரீ லலிதையின் உபாசனையை தாமஸ குணத்துடன் தேவிக்கு விலங்குகளை பலியிட்டு தொடங்கினாலும் அந்த பலியிடும் தாமஸ குணம் தேவியின் ஆசனமாக இருப்பதால் அவள் படிப்படியாக சாதகனின் அகத்திலிருக்கும் விலங்குகளான பேராசை, கோபம், மாயை, பெருமை, பொறாமை, பயம் போன்றவற்றை பலியிடச் செய்து பரிணாமத்தில் உயர்த்துகிறாள். மேலும் ரஜோ குணத்தை உண்டுபண்ணி உலகத்திற்கு நன்மை செய்யும் பதவி, ஆற்றல், எல்லோரையும் கட்டுப்படுத்த வேண்டும், ஆண்கள், பெண்களை வசீகரீக்க வேண்டும் என்ற ரஜோகுண உத்வேகங்களை உண்டு பண்ணுகிறாள்; 
இறுதியாக ஸாத்வீக குணப் பண்புகளான அன்பினை பரவச் செய்தல், கருணை, அறிவு, எது சரி எது பிழை எனும் பகுத்தறிவு, புலன் இன்பங்களை இறைசாதனையாக்கும் தன்மை, மற்றவர்களது முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்தல் ஆகிய பண்புகளை சாதகனில் உருவாக்குகிறாள். இந்த உயர்ந்த ஸாத்வீகத் தன்மையே ஸ்ரீ சக்கரம் என்று சொல்லப்படுகிறது. 
இந்த நிலை மூன்று உயர்ந்த உபாசனைகளின் சமத்துவத்தை சாதகனில் உண்டுபண்ணுகிறது. 
1. அக எதிரிகளை இல்லாதொழித்தல்
2. ஆற்றலினைப் பெறுதல்
3. பிரபஞ்ச அன்பினை உணர்தல் 
இவற்றைப் பெற்ற பிறகு இந்தத் தன்மைகளிலிருந்தும் மீண்டு அதை விட உயர்ந்த நிலை உபாசனையாகிய தானே அதுவென்று உணர்ந்து சும்மா இருத்தல் நிலையையும் ஸ்ரீ லலிதா உபாசனை தரும். இதுவே நிரந்த பேரின்பம் தரும் ஞானமாகும். 
சிம்மத்தை ஆசனமாக் கொண்டவளே அதை அடக்கவும் முடியும்; பிரக்ருதியினை அசைத்து செயல் படுத்தும் முக்குணங்களின் முதல் குணமான தாமஸ குணத்தை தனது ஆசனமாகக் கொண்டு ஒரு சாதனகனை ரஜோ, சத்துவ குணத்திற்கு உயர்த்தி பின்னர் குணங்களைத் தாண்டி தானே அது என்று உணரவைக்கும் உயர் ஸமாதி அனுபவத்தைத் தரக்கூடியது ஸ்ரீ லலிதா உபாசனை.
வழிகாட்டல்:
இந்தப் பதிவை வாசிக்கும் போது அன்னையை உபாசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் எந்த மனத் தடங்கலும் இன்றி இங்கு தரப்பட்டுள்ள ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஶ்ரீமத்ஸிம்ʼஹாஸனேஶ்வர்யை நம꞉ .
மந்திரத்தை தினசரி 108 ஜெபித்து வாருங்கள்! தகுந்த நேரம் வரும் போது அன்னை தனது குருபரம்பரையில் ஒருவரை குருவாக அனுப்பி முறையான உபாசனையைக் கற்பிப்பாள்! அதன் பின்னர் உங்கள் குரு முறைப்படி தீக்ஷை அருளி எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளைச் சொல்லித்தருவார்!
{எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எழுதிய "ஸுதா ஸ்யந்திநீ பாஷ்யம்" எனும் விளக்கவுரையின் தமிழாக்கம்; தேவி உபாசனை கற்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம்.}

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...